இனி உங்களுடைய வீட்டில் பூண்டு கெட்டுப் போவதற்கு வாய்ப்பே இல்லை! 6 மாதங்கள் வரைகூட பூண்டை கெட்டுப்போகாமல் ஸ்டோர் செய்ய இப்படி ஒரு வழி இருக்கா?

poondu2
- Advertisement -

நம்முடைய வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய சுவாரஸ்யமான தகவலை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். விலை குறைவாக இருக்கும் சமயங்களில் கொஞ்சம் அதிகப்படியான பூண்டை வாங்கி ஸ்டோர் செய்வதாக இருந்தால், ஈரப்பதமான பூண்டை வாங்கக்கூடாது. காய்ச்சலாக இருக்கும் பூண்டாக பார்த்து தான் வாங்க வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்களுக்கு எடுத்து வைக்க வசதியாக இருக்கும். நம்முடைய வீடுகளில் வாங்கி வைக்கும் பூண்டு சில சமயங்களில் சீக்கிரமே கெட்டுப் போய்விடும். 6 மாதங்கள் வரை பூண்டு கெட்டுப் போகாமல் பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக!

poondu

முதலில் நீங்கள் வாங்கிய பூண்டு, ஈர பூண்டாக இருந்தால் வேறு வழியே கிடையாது. அந்த பூண்டின் மேலே இருக்கும் தூசு தோல்களை மட்டும் எடுத்துவிட்டு, ஒவ்வொரு பூண்டு பல்லாக பிரித்து, காற்றோட்டம் உள்ள கூடையில் போட்டு வைக்க வேண்டும். மேலே இருக்கும் மெல்லிய தோலை மட்டும் தான் பிரித்து வைக்க வேண்டுமே தவிர, உள்ளே இருக்கும் பூண்டு தோலை உரித்து விடக்கூடாது. இது ஈரப்பதத்தில் இருக்கும் பூண்டுக்கு!

- Advertisement -

கொஞ்சம் காய்ந்த பூண்டை வாங்கினால் அந்த பூண்டினுடைய மேலே இருக்கும் லேசான தோலை மட்டும் நீக்கி விட வேண்டும். பூண்டின் நடுவே இருக்கக் கூடிய சிறிய காம்புப் பகுதியை லேசாக உங்கள் கைகளால் அசைத்து எடுத்தால், தனியாக வந்துவிடும். அந்த காம்பு பகுதியை நீக்கிவிட்டு முழு பூண்டை அப்படியே எடுத்து வைத்தால், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. (நடுவில் இருக்கும் அந்த காம்பு பகுதி தான் பூண்டை சீக்கிரமாக கெட்டுப் போக வைக்கும்.)

poojai1

சில சமயங்களில் ஒரு முழு பூண்டில் பத்து பல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இரண்டு பல் பூண்டு பூச்சி அரித்து விட்டது என்றால், அந்த பூண்டை உடனடியாக நீக்கி விட வேண்டும். இல்லை என்றால் அந்த பூச்சு மற்ற பூண்டுகளுக்கும் பரவி எல்லா பூண்டையும் வீணாகிவிடும்.

- Advertisement -

பூண்டை பிரிட்ஜில் வைத்து 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம்? பூண்டை முதலில் தனித்தனி பல்லாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பூண்டின் தலை பகுதியை மட்டும் கத்தியால் நீக்கிவிடவேண்டும். இப்போது இந்த பூண்டு திரிகளை எல்லாம் காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் 6 மாதம் வரை கூட பூண்டு கெட்டுப் போகாது.

poondu1

எப்போதுமே பூண்டை அதிகம் வெளிச்சம் படும் இடங்களில் வைக்கக்கூடாது. கொஞ்சம் இருட்டான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பூண்டு கெட்டுப் போகாமல் இருக்கும். இதேபோல் எப்போதுமே ஈரமான கைகளை கொண்டு பூண்டை தொடக்கூடாது. வெங்காயம் பூண்டை சேர்த்து வைக்கக் கூடாது. ஈரப்பதம் உள்ள எந்த ஒரு பொருளையும் பூண்டின் அருகில் வைக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி எல்லாம் செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பூண்டு நீண்ட நாட்களுக்கு நிச்சயம் கெட்டுப்போகாமல் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -