10 நாட்கள் ஆனாலும், வாழைப்பழம் கறுத்துப் போகாமல், பழுத்து போகாமல் இருக்க என்ன செய்யலாம்? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

banana

ஆரோக்கியம் தரக்கூடிய பழ வகைகளில், இந்த வாழைப்பழத்திற்கு முதலிடம் உண்டு. வாழைப்பழத்தை இரண்டு வாழைப்பழங்கள் நான்கு வாழைப் பழங்கள் என்றும் வாங்காமல். ஆனால் வாழைப்பழம் சீப்பு கணக்கில் வாங்கினால் அது நமக்கு லாபம் தான். விலை மலிவாக கிடைக்குமே என்று வாழைப்பழத்தை மொத்தமாக நம்முடைய வீட்டிற்கு வாங்கி வருவோம். ஆனால் அது சில நாட்களிலேயே, அதாவது இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளேயே வெயில் காலங்களில் தோல் கருத்துப் போய், பழுத்து போக ஆரம்பித்துவிடும். ஆனால் வாழைப்பழத்தை வாங்கி வந்து பக்குவமாக ஸ்டோர் செய்துவிட்டால் போதும். அந்த வாழைப்பழம் 10 நாட்கள் ஆனாலும் தோல் கருக்காமல் மஞ்சள் நிறத்திலேயே, சாப்பிடுவதற்கு ஏதுவாக சரியான பக்குவத்தில் இருக்கும். வாழைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு கறுத்துப் போகாமல் எப்படி பாதுகாப்பது?

banana2

சரி, சட்டுனு போய் இப்போ அந்த குறிப்பை பார்த்து விடலாம்? முதலில் நீங்கள் வாழைப்பழத்தை வாங்கும் போதே மிகவும் பழுத்த வாழைப்பழம் ஆக வாங்கக்கூடாது. கொஞ்சம் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய வாழைப்பழமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சீப்பு வாழைப்பழத்தை மொத்தமாக வாங்கி வந்து, அடுத்த நாளுக்குத் தேவையான இரண்டு அல்லது மூன்று வாழைப்பழத்தை மட்டும் காம்போடு எடுத்து தனியாக வைத்து விடுங்கள். அது அடுத்த நாளைக்குள் பழுத்துவிடும் சாப்பிடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மீதமிருக்கும் வாழைப்பழங்களை நுனி உடையாமல் காம்போடு மூன்று அல்லது நான்கு வாழைப் பழங்களாக கொத்துக் கொத்தாக தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த காம்பு பகுதியில் அலுமினியம் ஃபாயில் பேப்பரை சுற்றி வைத்து விட்டாலே போதும். அந்த வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு கறுத்துப் போகாமல் கறுத்துப் போகாமல் இருக்கும். மறுநாள் அந்த வாழைப்பழத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், முந்தைய நாளே அந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரை நீக்கிவிட வேண்டும். அடுத்த நாள் வாழைப்பழம் உங்களுக்கு பழுத்து வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

banana1

இந்த வாழைப்பழங்களை தனித்தனியாக பிரித்து எடுக்கும் போது வாழைப் பழத்தின் நுனியை வெட்டி விட கூடாது. அதாவது காம்பு உடைந்து விட்டால், வாழைப்பழம் சீக்கிரமே கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இரண்டாவதாக பழுத்த வாழைப் பழங்கள் ஆக இருந்தாலும், அதன் மேலே நீங்கள், இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரை சுற்றி வைத்தால் அந்த பழுத்த வாழைப்பழம் இன்னும் பழுக்காமல், பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதனுடைய தோல் சீக்கிரமே கருத்து போகத்தான் செய்யும். ஒரு காட்டன் துண்டை எடுத்து நன்றாக தண்ணீரில் நனைத்து சுத்தமாக பிழிந்துவிட வேண்டும். அதில் இந்த பழுத்த வாழைப்பழத்தை வைத்து லேசாக சுற்றி வைத்து விட்டால், தோலின் நிறம் மாறாது. வாழைப்பழம் மேலும் பழுக்காமல் இருக்கும்.

banana3

அடுத்தபடியாக வாழைப்பழத்தை வாங்கி வந்து டேபிளின் மேல் அல்லது கூடையில் வைத்து ஸ்டோர் செய்யாமல், அதை ஒரு கொடியில் தொங்க விட்டு வைத்தால், வாழைப்பழத்தின் அடிப்பக்கத்தில் இருக்கும் பழங்கள், சீக்கிரமாக கருத்துப் போகாமல் இருக்கும். இல்லையென்றால் ஒரு கயிறு கட்டி ஆணியில் மாட்டி வைத்து விடுங்கள்.

banana4

முடிந்தவரை பழங்களை வாங்கும்போது புகை போட்டு, ஸ்ப்ரே அடித்து பழுக்கவைக்கும் பழங்களைத் வாங்க வேண்டாம். அது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவது கிடையாது. பார்க்கும் போதே உங்களுக்கு நன்றாக தெரியும். ஒரு துளி அளவு கூட பச்சை நிறம் இல்லாமல், மஞ்சள் நிறத்தில் அழகாக பளபளப்பாக, தங்கம் போல ஜொலிக்கும் பழங்களை, நல்ல பழம் என்று நினைத்து வாங்கினால், அதில் நிச்சயமாக செயற்கை முறையில் பழுப்பதற்காக ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கும். கொஞ்சம் பழுத்து கொஞ்சம் பழுக்காமல் இருக்கும் பழத்தை வாங்கி நம்முடைய வீட்டிலேயே மெதுவாக பழுக்க வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
கடையில் விற்கும் எந்த எண்ணையும் வேண்டாம்! கொட்டின இடத்தில் மீண்டும் முடி கடகடன்னு வளர இத தேய்ச்சா போதுமே! பாட்டி காலத்து ரகசிய டெக்னிக் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.