வாஷிங் மெஷின் இல்லாமலேயே பேச்சுலர்கள் எப்படி ரொம்ப சுலபமாக சட்டையில் இருக்கும் காலர் அழுக்குகளை நீக்கலாம்?

collor-stain-shampoo
- Advertisement -

துணி துவைப்பதில் இருக்கும் சிரமம் வேறு எந்த வேலை செய்வதிலும் இருப்பதில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு துணி துவைப்பது ரொம்ப பெரிய வேலையாக இருக்கும். ஆனால் விடாப்பிடியான காலர் அழுக்குகளை கூட ரொம்ப எளிதாக நீக்கக்கூடிய இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் இனி துணி துவைப்பது அவ்வளவு கஷ்டம் அல்ல! குறிப்பாக திருமணமாகாத பேச்சிலர்களுக்கு இந்த குறிப்பு உபயோகமாக இருக்கும். வாங்க என்னன்னு? இந்த பதிவின் மூலம் தெரிஞ்சுக்குவோம்.

திருமணம் ஆகாத ஆண்கள், வீட்டை விட்டு வெளியில் தங்கி வேலை செய்பவர்களாக இருப்பவர்கள் தங்கள் துணிமணிகளை துவைப்பதில் ரொம்பவே சோம்பல் படுவது உண்டு. ஒரு வாரத்து துணியை மொத்தமாக சோப் பவுடர் போட்டு முக்கி வைத்து அப்படியே அலசி எடுப்பவர்களும் உண்டு. இதனால் அவர்களுடைய சட்டைகளில் இருக்கும் காலர் அழுக்குகள் சுத்தமாக நீங்குவதில்லை! மேலும் மேலும் இதே மாதிரி அவர்கள் துவைத்தால் விரைவாகவே அந்த துணிமணிகள் எல்லாம் வீணாகி போய்விடும்.

- Advertisement -

காலர் அழுக்குகள் நாட்பட நாட்பட ரொம்பவும் மோசமாக தெரிய ஆரம்பிக்கும் எனவே துணி துவைக்க சோம்பல் படுபவர்கள், இது போல தனியாக இருக்கும் பேச்சுலர்கள் ரொம்ப சுலபமாக தங்கள் துணிமணிகளை பளிச்சென மாற்றுவது எப்படி? நீங்கள் வாரம் ஒரு முறை சுவைத்தாலும் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள்.

லேசான சூட்டுடன் இருக்கும் தண்ணீரில் அரை கைப்பிடி அளவிற்கு தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அதன் பிறகு உங்களுடைய விடாப்பிடியான அழுக்குகள் நிறைந்துள்ள ஷர்ட்டுகள் அல்லது பேண்டுகள் எதுவாக இருந்தாலும் அதில் முழுவதும் மூழ்குமாறு நன்கு அமில்த்தி வையுங்கள். ஒரு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் விடாப்பிடியான அழுக்குகள் அந்த தண்ணீரில் கலந்து விடும்.

- Advertisement -

உப்பில் இருக்கும் சில மூலக்கூறுகள் இது போன்ற விடாப்பிடியான கறைகளை அகற்றக் கூடிய தன்மை கொண்டது. எனவே வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து இது போல துணிமணிகளை சிறிது நேரம் ஊற வைத்தால் அழுக்குகள் எளிதாக வந்து விடும். அதன் பிறகு ஒரு பெரிய பக்கெட்டில் உங்கள் தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு ஷாம்புகளை சேருங்கள். பின்னர் முக்கால் பாகம் தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்து நிமிடம் இந்த துணிமணிகளை ஊற வையுங்கள்.

துணி துவைக்கும் சோப், லிக்விட், டிடர்ஜென்ட் பவுடர், கம்போர்ட் என்று எந்த விதமான பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக வாசனைக்காக நீங்கள் உபயோகிக்கும் எதையும் சேர்க்க வேண்டாம். ஒரு ஷாம்பு போதும் உங்கள் துணிமணிகள் ரொம்பவே பளிச்சுன்னு மாறும். துணியில் நூல் இலைகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல், உங்களுடைய துணிமணிகள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும். 10, 15 நிமிடத்திற்கு பிறகு லேசாக எப்பொழுதும் போல நீங்கள் ஒவ்வொரு துணியாக எடுத்து தரையில் போட்டு துவைத்து எடுத்தால் போதும், ரொம்பவே கஷ்டப்பட வேண்டிய அவசியம் கூட இல்லை. பிறகு சாதாரண தண்ணீரால் அலசி காய வைத்து விட்டால் கொஞ்சம் கூட அழுக்குகள் இல்லாமல், துணியும் பளிச்சென நிறம் மங்காமல் புதிது போல மின்னும்.

- Advertisement -