கழட்டவே முடியாத மோதிரத்தையும், கழட்டவே முடியாத வளையலையும் இனி ஈசியாக கழட்டி கழட்டி மாட்டலாம். இந்த ஐடியாவை நீங்க தெரிஞ்சிக்கிட்டா.

hand1
- Advertisement -

கழட்டவே முடியாத மோதிரம் நம் கையில் நீண்ட நாட்களாக அப்படியே இருக்கும். அதை வெட்டி எடுக்கவும் மனசு இல்லாமல், கழட்டவும் முடியாமல் கை வலியோடு அப்படியே விட்டு வைத்து இருப்போம். அவ்வளவு இறுக்கமான மோதிரத்தையும் சுலபமான கழட்ட ஒரு ஐடியா. சில பெண்கள் வளையல் போடுவதற்கு ரொம்பவும் சிரமப்படுவார்கள். அவர்களுடைய கைமுட்டிகள் ரொம்பவும் பெரியதாக இருக்கும். வளையல் நுழையவே நுழையாது. அதற்காக பெரிய சைஸ் ஆக வளையல் போட்டால் அழகாகவும் இருக்காது. பெரிய முட்டிகை உள்ளவர்களும், சிறிய வளையலை சுலபமாக எப்படி போடுவது, சுலபமாக எப்படி கட்டுவது என்ற குறிப்பும் உங்களுக்காக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த குறிப்பை நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க. அவசரம் என்று வரும்போது அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூட இந்த குறிப்பு உதவியாக இருக்கும் அல்லவா. வாங்க நேரத்தை கலக்காமல் இந்த பயனுள்ள குறிப்பை எல்லோரும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சுலபமாக வளையலை போட்டு கழட்டும் முறை:
முதலில் ஒரு கேரிபேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது பிளாஸ்டிக் கவர். அதை உங்களுடைய கையில் முதலில் முழுமையாக போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது இறுக்கமான வளையலை அந்த கவருக்கு மேலேயே போட்டு பக்குவமாக கைக்கு உள்ளே ஏற்றினால், வளையல் சுலபமாக நழுவிக் கொண்டு முட்டியில் இடிபடாமல் கைக்கு உள்ளே ஏறிவிடும். கைகளில் மெட்டல் வளையல் கிழித்தோ கண்ணாடி வளையல் உடைந்தோ காயங்கள் படாமலும் இருக்கும்.

இதே போல ரொம்பவும் இறுக்கமாக இருக்கும் வளையலை கழட்டவும் இதே வழி தான். முதலில் கவரை உங்களுடைய கையில் நுழைத்துக் கொள்ள வேண்டும். அதே கவரை வளையலிலும் நுழைத்து விடுங்கள். (வளையல் கவருக்கு மேல் பக்கத்தில் இருக்கும்.) பின்பு அந்த கவரை கையில் இருந்து கழட்டி எடுக்கும்போது உங்களுடைய வலையிலும் அந்த கவரோடு கண்டு வெளியே வந்துவிடும். உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே போதும் சுலபமாக புரிந்துவிடும்.

- Advertisement -

அவிழ்க்க முடியாத மோதிரத்தை சுலபமாக எப்படி அவிழ்ப்பது:
உங்களுடைய விரலில் மோதிரமானது இருக்கக்கூடிய இடத்தில் லேசாக இடைவெளி இருக்கும். அதாவது மோதிரம் இருக்கும் பகுதிக்கு கொஞ்சம் மேலே தான் விரல்கள் தடிமனாக இருக்கும் அல்லவா. (விரலின் தடிமனான அந்த இடத்திலிருந்து மோதிரத்தை கழட்டுவதில் வடித்திருந்தால் சாமர்த்தியம் உள்ளது.) மோதிரம் இருக்கும் இடத்திலேயே அப்படியே வைத்து விட்டு, அதில் ஒரு சிறிய நூலை நுழைத்து விடுங்கள். அறுபடாத கொஞ்சம் மொத்தமான நூலாக இருக்கட்டும்.

இப்போது நூலின் மேல் பாகத்தை உங்களுடைய மோதிர விரலில் அப்படியே சுற்றி விட வேண்டும். நூலின் கீழ் பாகம் இருக்கும் அல்லவா. மோதிரத்தில் கீழ்ப்பக்கம் இருக்கும் நூல் முனையை உங்கள் கையில் பிடித்துக் கொண்டு, அந்த நூலை விரலை சுற்றும் போது உங்களுடைய மோதிரம் இருக்கும் இடத்தை விட்டு தானாக கழன்று மேலே வெளியே வரும். சுலபமாக கழட்டி விடலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை கவனமாக பார்த்தால் உங்களுக்கே புரியும்.

நிறைய பெண்களுக்கு கச்சிதமாக வளையல் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுக்கு அந்த வளையலை எப்படி உள்ளே தள்ளுவது என்ற சிரமம் இருக்கும். சோப்பு போட்டு உள்ளே ஏற்றலாம். ஆனால் மெட்டல் வளையலில் சோப்பு பட்டால் அது கருத்துப் போய்விடும். சில கண்ணாடி வளையல்களை சோப்பு போட்டு கைக்கு உள்ளே ஏற்றிக் கொள்ளலாம். ஆனால் சோப்பு போட்டா கூட கழற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். மேலே சொன்ன ஐடியாவை ட்ரை பண்ணா உங்களுக்கு பிடிச்ச மாதிரி கைக்கு இறுக்கமா வளையல் போட்டுக்கலாம். இதே போல தான் மோதகத்தை வெட்டி எடுக்கவோ, விரல்கள் வீங்கவோ எந்த அவசியமும் இனி இல்லை. மேலே சொன்ன இந்த சுலபமான குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா தேவைப்படும் போது முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -