கடைசியில் குப்பை தொட்டிக்கு போகும் இந்த குட்டி குட்டி சோப்பு துண்டுகளை இப்படியும் கூட பயன்படுத்தலாமா?

soap
- Advertisement -

பொதுவாகவே குளிக்கும் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு என்று பயன்படுத்திய பிறகு இறுதியில் அந்த சோப்பு துண்டுகள் மிகச் சின்னதாக மாறிவிடும். இதை பலபேர் பலவிதமாக மீண்டும் பயன்படுத்துவார்கள். சில பேர் இதை தூக்கி அப்படியே குப்பை தொட்டியில் போட்டு வைப்பார்கள். ஒரு டப்பாவில் போட்டு பயன்படுத்தலாம் என்று ஓரமாக வைப்பாங்க.

ஆனால், கொஞ்சம் காலத்தில் அந்த சோப்பு ட்ரையாகி பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு போய்விடும். சில பேர் இந்த சோப்பை புது சோப்போடு தண்ணீர் போட்டு ஒட்டி பயன்படுத்துவாங்க. சில பேர் அப்படியே பாத்திரம் தேய்க்க பயன்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் இந்த மீதமான சோப்பை எப்படி பயன்படுத்தினாலும் சரி.

- Advertisement -

இந்த ஐடியாவையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க. இது உங்களுக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். நிறைய காசு மிச்சம் பிடிக்க இந்த ஐடியா பயன்படும். இல்லத்தரசிகளுக்கு தேவையான வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

மீதமான சோப்பை மீண்டும் பயன்படுத்த புது ஐடியா

மீதமான சோப்பு துண்டுகளை எல்லாம் அப்படியே ஒரு டப்பாவில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா. அதை சின்ன சின்ன துண்டுகளாக உடைக்கலாம். இன்னும் சுலபமாக வேண்டும் என்றால் ஒரு துருவலில் துருவிக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். சூடான தண்ணீரில் இந்த சோப்பை போட்டு அடுப்பை அணைத்து விட்டு ஒரு ஸ்பூனை வைத்து கலந்து கொடுங்கள்.

- Advertisement -

இதோடு தூள் உப்பு 1 டேபிள் ஸ்பூன், ஷாம்பு 2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு இரண்டு டேபிள் ஸ்பூன், ஊற்றி நன்றாக கலந்தால் சூப்பரான லிக்விட் தயார். இதை ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொண்டால் தினமும் வாஷிங் மெஷின் லிக்விட் ஆக பயன்படுத்தலாம்.

வாஷிங் மெஷினில் ஊற்றும் லிக்விட் எவ்வளவு விலை காஸ்ட்லியாக கிடைக்கிறது. அதற்கு பதில் இதை பயன்படுத்தி பாருங்கள். அட இந்த மலிவான லிக்விட் ஊற்றினால் வாஷிங் மெஷின் என்ன ஆகும் என்று யோசிக்காதீங்க. எதுவும் ஆகாது. இருந்தாலும் உங்களுக்கு வாஷிங்மெஷினில் இந்த லிக்விடை ஊற்ற விருப்பம் இல்லையா.

- Advertisement -

வீட்டில் கால் மிதியடி துவைக்க, ஸ்கிரீன் துவைக்க இப்படி பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் இதை பாத்ரூம் கழுவ, சிங் கழுவ மற்ற கிளீனிங் பர்ப்போசுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சோப்பு கட்டியாக பயன்படுத்தும் போது நமக்கு சிரமங்கள் இருக்கும். அதையே இப்படி லிக்விட் ஆக மாற்றி விட்டால் சூப்பரான பெனிஃபிட் கிடைக்கும்.

சோப்பு பவுடர் போட்டு துணியை ஊற வைப்பது விட இந்த லிக்விட் ஊற்றி துணியை ஊற வைத்தால் துணியில், அழுக்கும் சுலபமாக சுத்தமாகும். அதே சமயம் இதில் இருக்கும் ஷாம்பு உங்கள் துணிகளை வாசனையாகவும் மாற்றும். வீட்டில் மீதமான துணி சோப்பு, குளிக்கின்ற சோப்பை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை.

இதையும் படிக்கலாமே: அடுப்படி வேலையை சுலபமாகும் அட்டகாசமான அஞ்சு டிப்ஸ்

இப்படியும் ஒரு ஐடியா இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள். எளிமையான இந்த வீட்டு குறிப்பு பிடிச்சவங்க முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -