அடுப்படி வேலையை சுலபமாகும் அட்டகாசமான அஞ்சு டிப்ஸ்

kitchen tips
- Advertisement -

வீட்டு வேலைகளை பொருத்த வரை வேலைக்கு செல்பவராக இருக்கட்டும், வீட்டில் இருப்பவராக இருந்தாலும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் ஒரு சில வேலைகளை செய்து முடிக்கவே பல நேரம் எடுக்கும். அப்படியான சில வேலைகளை சுலபமாக செய்து முடிக்க அட்டகாசமான டிப்ஸை தான் வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

காய்கறி நறுக்குறதிலேயே கஷ்டமான காரியம் கொத்தவரங்கா, பீன்ஸ், வெண்டைக்காய் போன்றவற்றை நறுக்குவது தான். இவைகளை சுலபமாக நறுக்க காயை சுத்தம் செய்த பிறகு முதலில் காய்களை ஒன்றாக சேர்த்து வைத்து ரப்பர் பேண்ட் போட்ட பிறகு நறுக்கி பாருங்கள். ஒரே நேரத்தில் நிறைய காய்களை சுலபமாக நறுக்கி விடலாம்.

- Advertisement -

இதே போல கீரையை சுத்தம் செய்து பொரியலுக்கு நறுக்குவதும் கொஞ்சம் சிரமமான வேலை தான். அதற்கு கீரையை நன்றாக சுத்தம் செய்த பிறகு கடைகளில் பழங்கள் போட்டு தரும் வலை  பையில் போட்டு விடுங்கள்.  அதன் பிறகு  பையை வெளிப்புறமாக மடித்து கொஞ்சம் கொஞ்சமாக கீரையை நறுக்குங்கள். ஒரே நேரத்தில் மொத்த கீரையும் நறுக்கி விடலாம்.

அடுத்து பூரி சுடும் போது நாம் ஒவ்வொரு பூரியாக திரட்டிய பிறகு தான் எண்ணெயில் போட வேண்டும். இதனால் அதிக நேரம் பிடிக்கும். அதற்கு சப்பாத்தி திரட்டும் கல்லில் சப்பாத்தி அகலத்திற்கு பெரிதாக மாவை தேய்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணமோ மூடியோ வைத்து சின்ன சின்ன பூரிகளாக எடுத்து விடுங்கள். இது சிறிதாக இருப்பதால் பொரிக்கும் போதும் இரண்டு மூன்று பூரிகளாகவே போட்டு பொரிக்கலாம். இதனால் எண்ணெய்யும் மிச்சமாகும் சீக்கிரத்தில் சமையலும் முடியும்.

- Advertisement -

அடுத்து காய்ந்த மிளகாய் பயன்படுத்திய பிறகு அதில் மீதம் இருக்கும் அதன் காம்புகளையும் விதைகளையும் ஒரு நியூஸ் பேப்பரில் கொட்டி பொட்டலம் போல மடித்து விடுங்கள். அதன் மேல் பின் வைத்து ஓட்டைகள் போட்ட பின்பு அதை அரிசி பருப்பு வைக்கும் பாத்திரத்தில் வைத்தால் பூச்சி வண்டுகள் வராமல் பொருட்கள் அதிக நாள் கெடாமல் இருக்கும்.

வீட்டில் தினமும் வைக்கும் குழம்பு பதார்த்தங்களில் கொஞ்சமா மீந்து விடும். அதை அடுத்த நாள் சூடு செய்வதற்காக தனியாக ஒரு பாத்திரத்தை தேட வேண்டாம். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் இந்த சிறிய கிண்ணத்தை கல்லின் மீது வைத்து சுற்றிலும் தண்ணீர் ஊற்றி, அதன் பிறகு மூடியை வைத்து குழம்பை மூடி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் குழம்பு நன்றாக சூடாகி விடும்.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்து ரூபாய் செலவு பண்ணா போதும் மாதம் முழுவதும் உங்க வீட்டு சமையல் பாத்திரங்கள் ஜொலிக்கும்

சமையல் அறையில் இருந்து சமைக்கும் ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய எளிமையான இந்த குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -