நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு செயல்களிலும் ஏதாவது ஒரு திருஷ்டி என்பது இருக்கும். பொதுவாக இதை நாம் கண் திருஷ்டி என்று கூறுவோம். சாதாரண கண் திருஷ்டியாக இருக்கும் பட்சத்தில் அதற்காக பல விதமான பரிகாரங்கள் இருக்கும். கண் திருஷ்டி என்பது எதற்கு வேண்டுமானாலும் வரும் அல்லவா? எதற்காக வருகிறது என்பதை பொறுத்துமே பரிகாரங்கள் என்பது மாறுபடும். வாழ்க்கையில் எந்தவித சாதனையும் செய்யாமல் அடி எடுத்து வைக்கும் பொழுதே பலரது பார்வைகளால் நமக்கு திருஷ்டிகள் என்பது ஏற்படும். ஒரு சிலருக்கு அழகான மகள், மகன் இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினால் திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். அதுவும் ஒருவகையான திருஷ்டி தான்.
வேலையில் இப்பொழுதுதான் சேர்ந்திருப்போம், ஆனால் அதில் பலவிதமான பிரச்சனைகள் பலரால் நமக்கு ஏற்படும். அதுவும் ஒரு வகையான திருஷ்டி தான். இப்படி பலவிதமான திருஷ்டிகள் இருக்கின்றன. இவை அனைத்துமே சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்களை செய்ய வேண்டும். பரிகாரங்கள் எந்த அளவிற்கு நமக்கு உதவி செய்யுமோ அதே போல் தான் தெய்வ வழிபாடும் நமக்கு உதவி செய்யும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு எந்தவித திருஷ்டி தோஷங்களும் ஏற்படாமல் இருக்கும் என்று தான் பார்க்க போகிறோம்.
திருஷ்டிகள் அணுகாமல் இருக்க
நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடைபெற வேண்டும் எந்தவித தடைகளும் இருக்கக் கூடாது என்று நினைக்காத நபர்களை இருக்க மாட்டார்கள். அப்படி எந்தவித தடைகளும் வராமல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பாக இந்த தெய்வத்தை தரிசனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். காரிய தடையை நீக்க வேண்டும் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது விநாயகர் பெருமான் தான். ஆம் விநாயகப் பெருமான் காரிய தடைகளை மட்டும் அல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்திற்கும் ஒரு நல்ல வழியை காட்டுவார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானின் படத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பலரும் தங்களுடைய பாக்கெட்டிலோ பர்சிலோ தெய்வத்தின் படங்களை வைத்திருப்பார்கள். அந்த வகையில் விநாயகரின் படத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் மட்டும் கிடையாது விநாயகருடன் சேர்ந்து விநாயகரின் சகோதரரான முருகப்பெருமானின் படத்தையும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முருகப்பெருமானின் படத்தை வைக்கும் பொழுது வள்ளி தெய்வானையுடன் சேர்ந்த முருகப்பெருமானை வைக்காமல் தனித்து வேலுடன் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை நாம் வைக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஒரு சேர இருக்கக்கூடிய படத்தை கூட நாம் வைத்துக் கொள்ளலாம். இந்த படத்தை எப்படி வைக்க வேண்டும் எந்த நாளில் வைக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன.
இந்த படத்தை செவ்வாய்க்கிழமை அன்று வாங்க வேண்டும். அருகில் முருகனின் ஆலயம் இருந்தாலும் சரி விநாயகரின் ஆலயம் இருந்தாலும் சரி அந்த ஆலயத்திற்கு போய் இந்த படத்தை சுவாமியின் திருவடியில் வைத்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய சொல்லி திருப்பி வாங்க வேண்டும். இப்படி வாங்கிய படத்தை நம்முடைய பர்சிலோ, பாக்கெட்டிலோ, மடிக்கணினி பையிலோ, கைபையிலோ வைத்துக் கொள்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய திருஷ்டி, தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் எந்த ஒரு காரியத்தை செய்ய தொடங்குவதற்காக இருந்தாலும் அதை தொடங்குவதற்கு முன்பாக இவர்களை தரிசித்து வணங்கி விட்டு பிறகு செய்ய ஆரம்பிக்கும் பொழுது அதில் எந்தவித தடைகளும் ஏற்படாது, சரியான பாதையை நோக்கி நம்மை இவர்கள் வழிநடத்திச் செல்வார்கள்.
இதையும் படிக்கலாமே: புண்ணியத்தை சேர்க்கும் ஆவணி பௌர்ணமி பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த தெய்வ வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு திருஷ்டி தோஷங்கள் அற்ற முன்னேற்றமான வாழ்க்கை உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.