கொத்தமல்லி தழையில் இருக்கும் கடைசி தண்டு வரை வீணா போகாமல் பயன்படுத்தலாம். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிந்தால்.

- Advertisement -

தினமும் சமையலுக்குப் பயன்படக்கூடிய ஒரு பொருள் கொத்தமல்லி தழை. அந்த கொத்தமல்லி தழையை ஒரு கட்டு என்ற அளவில் வாங்கி விட்டால், அதில் கால்வாசி கூட சமையலுக்கு பயன்படுத்த மாட்டோம். மீதம் இருக்கும் கொத்தமல்லி தழை பிரிட்ஜிலேயே கவரிலேயே அழிவி தான் குப்பைக்கு போகும். இந்த கொத்தமல்லி தலையை நீண்ட நாட்களுக்கு வாடாமல் அப்படியே ஸ்டோர் செய்து, கடைசி தண்டு வரை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய பயனுள்ள ஒரு வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

கொத்தமல்லிதழை நீண்ட நாட்களுக்கு வாடாமல் இருக்க சூப்பர் ஐடியா:
வாங்கி வந்த உடன் கொத்தமல்லி தழை கட்டை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து சுருட்டி வைத்து விடுங்கள். அதில் இருக்கும் ஈரத்தை எல்லாம் இந்த டிஷ்யூ பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும். அப்படி இல்லை என்றால் வெள்ளைக் காட்டன் துணியில் கூட 5 நிமிடம் சுருட்டி வெளியிலேயே வைக்கலாம். அதன் பின்பு கட்டில் இருக்கும் வேர் பகுதியை மட்டும் வெட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். வேர்ப்பகுதிக்கு மேலே இருக்கும் தண்டு பகுதியை தனியாக வெட்டி எடுத்து ஸ்டோர் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கீழே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு, வெறும் இந்த கொத்தமல்லி தழை தண்டுகளை மட்டும் அதில் போட்டு, மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு, வைத்து விட்டால் போதும். தினமும் நான்கு தண்டுகளை ரசம் சாம்பாரில் போட்டால் சூப்பர் வாசம் இருக்கும்‌ இந்த தண்டுகளை சட்னி அரைக்க கூட பயன்படுத்தலாம். தண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டால், தண்டுகள் ரொம்ப நாட்களுக்கு வாடாமல் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வெட்டி தனியாக வைத்திருக்கும் கொத்தமல்லி தழைக்கு வருவோம். அதை அப்படியே பிரித்து தட்டில் பரப்பி வைத்து அதில் இருக்கும் பில், தேவையில்லாத பழுத்த கொத்தமல்லி தழைகளை எல்லாம் நீக்கிவிட்டு, நன்றாக உதறிவிட்டால் உள்ளே இருக்கக்கூடிய மண் கீழே உதிர்ந்து விடும். இப்போது இதை ஒரு சில்வர் டப்பாவில் ஸ்டோர் செய்யலாம். காற்று புகாத சில்வர் டப்பாவுக்கு கீழே ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு, இந்த மல்லித்தழைகளை வைத்து, மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது. (கண்ணாடி பாட்டில் பிளாஸ்டிக் கண்டைனரில் கூட இப்படி ஸ்டோர் செய்யலாம்.)

- Advertisement -

அப்படி இல்லை என்றால் ஜிப் லாக் கவர் உள்ளே இந்த கொத்தமல்லி தழைகளை ஸ்டோர் செய்யலாம். அப்படியும் இல்லை என்பவர்கள் பாசுமதி அரிசி, உளுந்தம் பருப்பு எல்லாம் பேக் செய்து வந்த கவர் நமக்கு கிடைக்கும். அதன் உள்ளே அலுமினிய பாயில் பேப்பர் போல சில்வர் நிறத்தில் இருக்கும். அப்படிப்பட்ட கவர் உங்களுக்கு கிடைத்தால் அதை தூக்கி போட்டுடாதீங்க. அதன் உள்ளே கொத்தமல்லி, தழை புதினா இவைகளை போட்டு காற்று போகாமல் சுருட்டி வைத்தால், 15 நாட்கள் வரை கூட உள்ளே இருக்கும் பொருள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பிசுபிசுப்பான ஜன்னலை சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா? அட்டகாசமான இந்த 10 ஹோம் டிப்ஸ் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க ஆச்சரியப்படுவீங்க!

சில இடங்களில் ரொம்பவும் ஃபிரஷாக நாட்டு கொத்தமல்லி தழைகள் கிடைக்கும். நாட்டு கொத்தமல்லி தழைகள் கிடைத்தால் அதை வாரத்தில் ஒருமுறை வேர் பகுதியோடு சேர்த்து நன்றாக தண்ணீரில் அலசி விட்டு, சட்னி அரைத்து சாப்பிட்டால் ரொம்பவும் உடலுக்கு நல்லது. நாட்டு கொத்தமல்லி தழையில் வேரை கூட நாம் தூக்கி குப்பையில் போட வேண்டாம். உங்களுக்கு இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் பின்பற்றலாம்.

- Advertisement -