4 நாட்கள் ஆனாலும் கீரைக் கட்டு, ஃப்ரெஷ்ஷாக பச்சை பசேலென இருக்க எப்படி ஸ்டோர் செய்வது? ஃபிரிட்ஜ் இல்லைன்னாலும் பரவாயில்லை.

keerai
- Advertisement -

கீரையை வாங்கிய உடனேயே சமைத்து சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பறித்த கீரைகளை அன்றைய நாளில் சமைத்து சாப்பிட்டால்தான் சுவையும் கூடுதலாக இருக்கும். சரி, வாங்கிய கீரைக் கட்டுகளை சுத்தம் செய்ய முடியாத சூழ்நிலை, அடுத்த நாள் எடுத்து வைக்க வேண்டும். சில பேருக்கு கீரைக் கட்டுகளை பிரிட்ஜில் ஸ்டோர் செய்வது பிடிக்கும். சில பேர் கீரையில் உள்ள சத்து குறைந்து போய்விடும் என்று பிரிட்ஜில் எடுத்து வைக்க மாட்டார்கள். ஃப்ரிட்ஜில் பசுமையாக கீரைக் கட்டுகளை ஸ்டோர் செய்வது எப்படி. ஃப்ரிட்ஜில் வைக்காமல் கீரைக் கட்டுகளை பசுமையாக ஸ்டோர் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vendhaya-keerai

வாங்கிய கீரைக் கட்டுகளை அடுத்தநாள் எடுத்து வைக்கவேண்டும். பிரிட்ஜில் வைக்கப் போவது கிடையாது. ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீரில் நனைத்து முழுமையாக பிழிந்து விட்டு, அந்த துணியில் கீரைகட்டை அப்படியே வைத்து, காற்று உள்ளே புகாமல் சுருட்டி வெயில் படாத இடத்தில், காற்று படாத இடத்தில் வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

துணி ஈரம் ஆறியதும், மீண்டும் ஒரு முறை அந்தத் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து கீரையை சுற்றி வைத்து விடவேண்டும். துணியில் நிறைய தண்ணீர் இருக்கக்கூடாது. அப்படியே ரொம்பவும் ஈரத்துடன், துணியில் தண்ணீர் இருந்தால் கீரை அழுகிவிடும். இப்படி செய்தால் கீரை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை ஃப்ரெஷ் ஆகவே இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்காமல், வெளியில் வைத்தால் கூட.

keerai

காட்டன் துணியை விட பெஸ்ட் எது தெரியுமா. சாக்குப்பை தான். கோணிப்பைகள் என்று சொல்லுவார்கள். கீரையை இந்த சாக்குப் பையில் மூட்டையாக கட்டி தான் கொண்டு வருவார்கள். அப்படி ஒரு சாக்குப் பையை வாங்கி வைத்துக் கொண்டால், அதை நினைத்து அதனுள்ளே இந்த கீரையை வைத்து சுருட்டி வைத்தோம் என்றாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு கீரை வாடாமல் இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஃப்ரிட்ஜில் நான்கு நாட்களுக்கு கீரை பிரஷ்ஷாக பசுமையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. கீரைகடை வாங்கியவுடன் கீரையை கட்டியிருக்கும் கயிறை வெட்டி எடுக்க வேண்டாம். கயிறுக்கு கீழ் பக்கத்தில் இருக்கும் வேர் பகுதியை மட்டும் கத்தியால் வெட்டி நீக்கி விடுங்கள். அதன் பின்பு கீரையில் இருக்கும் கயிறை அப்படியே உருவி கீழ்பக்கமாக எடுத்துவிடலாம்.

keerai1

இப்போது வெட்டி எடுக்கப்பட்ட தண்டு பகுதி கீழ்ப்பக்கம் இருக்கும். மேலே கீரை உள்ள பகுதி இருக்கும். இது அப்படியே இருக்கட்டும். கீரை கட்டு உள்ளே போகும் அளவிற்கு ஒரு சில்வர் டப்பாவை எடுத்து கொள்ளுங்கள். சில்வர் டப்பாவுக்குள் அடியில் ஒரு நியூஸ் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரை போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக தயாராக இருக்கும் கீரையை அப்படியே கலையாமல் எடுத்து வெட்டிய தண்டு பகுதி கீழ் பக்கம் போகும் படி, சில்வர் டப்பாவில் வைத்து விட வேண்டும். கீரையை இப்படி சில்வர் டப்பாவுக்குள் நிற்க வைத்தால் தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.

keerai

இப்போது கீரைக்கு மேலே, சில்வர் டப்பாவில் மேலே, ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு அதன் பின்பு அந்த சில்வர் டப்பாவை மூடி, அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் கீரை பச்சை பசேல் என, நான்கு நாட்களுக்குக் கூட கெட்டுப்போகாமல் இருக்கும். அழகி போவதற்கு வாய்ப்பு கிடையாது. ஆனால் தினம்தோறும் உள்ளே இருக்கும் நியூஸ் பேப்பரை மட்டும் மாற்றி வைக்க வேண்டும். நியூஸ் பேப்பரில் ஈரம் பட்டால் கீரை அழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ட்ரை பண்ணி பாருங்க. முடிஞ்சவரை கீரையை அன்னைக்கே சமைக்க பாருங்கள்.

- Advertisement -