1 வருடம் ஆனாலும் வாங்கி வைத்த காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்கும். கரண்ட் இல்லாமல் வேலை செய்யும், இந்த பிரிட்ஜில் காய்கறிகளை ஸ்டோர் செய்து வைத்து பாருங்கள்.

vegtables
- Advertisement -

பெரும்பாலும் நிறைய பேர் சந்தையிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் காய்கறிகளை வாங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். கொஞ்சம் பெரிய குடும்பமாக இருந்தால் மொத்த காய்கறிகளையும் பிரிட்ஜில் வைத்து நம்மால் கட்டாயமாக ஸ்டோர் செய்ய முடியாது. அதே சமயம் வாங்கிய காய்கறிகளும் சுருங்காமலும் கெட்டுப் போகாமலும், வாடாமலும் பிரஷ்ஷாக இருக்க அந்த காய்கறிகளை எப்படி ஸ்டோர் செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அந்த கரண்ட் இல்லாத ஃப்ரிட்ஜை பற்றி முதலில் பார்த்துவிடுவோம். ஒரு அகலமான பூந்தொட்டி போல பிளாஸ்டிக்கில் இருந்தால் கூட பரவாயில்லை, அதை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தொட்டிக்கு உள்ளே செம்மண் அல்லது உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு மண்ணை நிரப்பி விடுங்கள். அந்த மண்ணில் தண்ணீரை ஊற்றி மண்ணை நன்றாக ஈரமாக்கி விட வேண்டும். இந்த மண் சேறு போல தளதளவென இருக்கவேண்டும்.

- Advertisement -

இந்த ஈரமான மண்ணுக்கு மேலே மீடியம் சைஸில் ஒரு பானையை வைத்து விடுங்கள். பானையின் அடிபாகம் மண்ணில் படும்படி இருக்க வேண்டும். இந்தப் பானை தாங்க உங்க வீட்டோட கரண்ட் இல்லாத ஃபிரிட்ஜ். கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புடலங்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ் இப்படி என்று எல்லா காய்கறிகளையும் அந்த பானைக்கு உள்ளே போட்டு விடுங்கள். ஒரு சிறிய சொம்பில் தண்ணீர் நிரப்பி அந்த காய்கறிக்கு மேலே வைத்து விடுங்கள். தண்ணீரை காய்கறியகல் ஊற்றி விடாதீர்கள். சொம்புடன் அப்படியே உள்ள வையுங்க. (கேரட்டுக்கு காம்பு பகுதியை வெட்டி விட்டு வைக்கவேண்டும். முள்ளங்கிக்கு மேல் அந்த காம்பு பகுதி கட்டாயம் இருக்க வேண்டும். பீட்ரூட் மேலே அந்த காம்பு பகுதி கட்டாயம் இருக்க வேண்டும். பானைக்குள் வைக்கும்போது இதையும் கவனிங்க.)

இந்த பானையின் மேல் பகுதி முழுவதும் கவர் ஆகும்படி ஒரு காட்டன் துண்டை ஈரத்தில் நனைத்து அப்படியே போட்டு மூடி விடவேண்டும். மேலே இருக்கும் அந்த துணி காய்ந்து விட்டால் மீண்டும் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து பானையை கவர் செய்து வைத்து விடுங்கள். இப்படி செய்தால் உள்ளே இருக்கும் காய்கறிகள் நீண்ட நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்ததுபோலவே பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இப்படிப்பட்ட கிழங்குகளை வாங்கி வைப்போம். அதை சில நாட்கள் கழித்து சமைக்கலாம் என்று அப்படியே விட்டுவிடுவோம். சில சமயம் அந்த கிழங்கு சுருங்கி கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நல்லெண்ணையும் மஞ்சளையும் கரைத்து ஒரு பேஸ்ட் போல தயார் செய்து, அந்த கலவையை கிழங்கின் மேலே நன்றாக தடவி, இதன் மேலே ஒரு நியூஸ் பேப்பரைப் போட்டு அப்படியே சுருட்டி ஸ்டோர் செய்தால் இந்தக் கிழங்கு ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக அப்படியே இருக்கும்.

இதேபோலத் தான் வாங்கிய பச்சை மிளகாய்களை காம்பை நீக்கிவிட்டு, அந்த பச்சை மிளகாயில் இந்த நல்லெண்ணெய் மஞ்சள் தூள் கலந்து பேஸ்டுடன் போட்டு நன்றாக பிரட்டி விட வேண்டும். இந்த பச்சை மிளகாய்களை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து சுருட்டி, ஒரு சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் ஃபிரிட்ஜ் இல்லாமலேயே. மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -