தரையை துடைக்க மட்டும் பயன்படுத்தும் லைசாலுக்கு பின்னால் இத்தனை விஷயம் அடங்கி இருக்குதா?

lyzol
- Advertisement -

பெரும்பாலும் இப்போது எல்லோர் வீடுகளிலும் தரையை துடைக்க பயன்படுத்தும் லிக்விட் லைசால். இது ஒரு கிருமி நாசினி தான். கெட்ட கிருமிகளை அழிக்க கூடிய சக்தி இதில் இருக்கிறது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த லைசாலை பயன்படுத்தி நம்முடைய வீட்டை இன்னும் எப்படி எல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய பல உபயோகமான வீட்டு குறிப்புகள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக. தேவைப்படுபவர்கள் படித்துப் பாருங்கள். இல்லத்தரசிகளுக்கு இந்த வீட்டு குறிப்பு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

லைசால் வீட்டு குறிப்புகள்

ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா எடுத்துக்கோங்க. அதில் லைசால் 1 மூடி, வாசனைக்காக கம்ஃபோர்ட் 1 மூடி, தண்ணீர் 1 சின்ன டம்ளர் ஊற்றி இந்த கலவையை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த லிக்விட் அதிகமாக தேவை என்றால், கூடுதலாக நீங்கள் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தயார் செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

தயார் செய்த இந்த லிக்விடில் ஒரு திக்கான சாக்ஸ் அல்லது காட்டன் துணியை நனைத்து கொள்ளுங்கள். ஒட்டடை குச்சிக்கு மேல் அந்த லைசால் தண்ணீரில் ஈரமான ஷாக்ஸை போட்டு ரப்பர் பேண்ட் போட்டுக்கோங்க. இப்போது இந்த ஒட்டடை குச்சியால் உங்கள் வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் ஒட்டடை அடிக்கும் போது, இந்த துணியில் இருக்கும் லைசால் ஈரம் சுவற்றின் மூளை முடுக்குகளில் படும்.

அப்போது அந்த இடத்தில் எல்லாம் மீண்டும் ஒட்டடை சீக்கிரத்தில் சேராது. அதே சமயம் கண்ணுக்குத் தெரியாத சின்ன சின்ன சிலந்திகளும் உங்களுடைய வீட்டில் கூடு கட்டாமல் சுத்தமாக இருக்கும். அதோடு ஈரத்துணியை வைத்து ஒட்டடையை அடிப்பதன் மூலம் அந்த ஒட்டடை வீடு முழுவதும் பரவி வீட்டை அசுத்தமும் செய்யாது.

- Advertisement -

இதே லிக்விடை இன்னும் கொஞ்சம் நிறைய தண்ணீராக கலந்து கொள்ள வேண்டும். அதாவது 1/2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கோங்க. அதில் 2 மூடி லைசால், 2 மூடி வாசனையான கம்போர்ட் ஊற்றி, கலந்து கொள்ளுங்கள். ஒரு பழைய வாட்டர் கேனில் இந்த லிக்விடை ஊற்றி மூடி போட்டு சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுக்கோங்க. இதை பாத்ரூமில் வையுங்க.

ஒரு முறை பாத்ரூமில் நீங்கள் பயன்படுத்திய பிறகு இந்த ஸ்ப்ரே பாட்டிலில் இருக்கும் லிக்விடை டாய்லெட்டில் கொஞ்சம் ஊற்றி விட்டால் டாய்லெட் இருந்து துர்நாற்றம் வீசாது. அது மட்டும் இல்லாமல் இது ஒரு கிருமி நாசினியாக செயல்படும். வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

- Advertisement -

குப்பை கூடைக்கு அடிப்பக்கத்தில் ஒரு டிஸ்யூ பேப்பரை போட்டு இந்த லிக்விடை கொஞ்சமாக ஸ்ப்ரே செய்து வைத்தால், அந்த குப்பை கூடையில் சின்ன சின்ன கொசுக்கள் ஈக்கள் எறும்புகள் வராமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் குப்பை கூடையில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

ராத்திரி சிங்கை சுத்தம் செய்து விடுங்கள். சிங்கக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டு இந்த லிக்விடால் அந்த டிஷ்யூ பேப்பரை நனைத்து விடுங்கள். அவ்வளவுதான். உங்கள் வீட்டிற்குள் இரவு நேரத்தில் அந்த சிங்கு ஓட்டை வழியாக கரப்பான் பூச்சிகள் வராது.

காய்ந்த காட்டன் துணியில் வெறும் லைசாலை தொட்டு அழுக்கு படிந்த வெள்ளை ஷூவை துடைத்து பாருங்கள். நிமிடத்தில் அழுக்கான வெள்ளை ஷூஸ் ஜொலி ஜொலிக்கும். உங்களுடைய சுவற்றில், குழந்தைகள் ஸ்கெட்ச் பென்சில் பேனாவை வைத்து கிறுக்கி உள்ளார்களா?

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்கள் தகதகன்னு மின்ன ஒரு துண்டு மாங்காய் இருந்தா போதும்.

அந்த இடத்தை சுத்தம் செய்யவும் இதே போல வெறும் லைசாலை காட்டன் துணியில் தொட்டு துடைத்து பாருங்கள். கிறுக்கிய கிறுக்கல்கள் எல்லாம் சீக்கிரம் நீங்கிவிடும். சுண்ணாம்பு அடித்திருந்தால் இதை முயற்சி செய்யக் கூடாது. சுவரில் பெயிண்ட் அடித்திருந்தால் இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

- Advertisement -