பூஜை பாத்திரங்கள் தகதகன்னு மின்ன ஒரு துண்டு மாங்காய் இருந்தா போதும்.

pooja vessels raw mango
- Advertisement -

இந்த பூஜை பாத்திரங்களை வாரம் ஒரு முறை கட்டாயமாக தேய்த்து வைத்து விடுவோம். ஏனெனில் ஒரு வாரம் இதை தேய்க்க தவறி விட்டால் கூட அடுத்த முறை தேய்க்கும் போது அதிக சிரமப்பட வேண்டியது இருக்கும். இந்த சிரமத்தை தவிர்க்க ஒரு எளிமையான குறிப்பை பற்றி தான் வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீட்டில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து அதை அழகாக மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தீபம் ஏற்றி வணங்கும் போது வீட்டிற்கு தெய்வ கடாட்சம் கிடைப்பதுடன் மனதிற்கு நிறைவும் கிடைக்கும். இதையெல்லாம் பெற நிச்சயம் அந்த பூஜை பாத்திரங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அதில் எண்ணெய் பிசுக்கு படிந்து பார்க்கவே நன்றாக இல்லாத சமயத்தில் பூஜை செய்தால் பூஜைக்கு பலனில்லை.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய

இந்த பதிவில் எண்ணெய் பிசுக்கு படிந்த பூஜை பாத்திரங்களை கூட எளிமையாக எப்படி சுத்தம் செய்வது என்று பார்க்கலாம். இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் தான் கொஞ்சம் வித்தியாசமானது. அது வேறொன்றுமில்லை மாங்காய் தான். மாங்காயை வைத்து எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா வாங்க அதையும் தெரிந்து கொள்ளலாம் .

இதற்கு நாம் ஒரு பேஸ்ட் தயாரிக்க வேண்டும். அதற்கு முதலில் ஒரு துண்டு மாங்காய் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக துருவி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு ஸ்பூன் ஷாம்பூ, இரண்டு ஸ்பூன் சபீனா பவுடர் அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த விழுதை ஒரு பவுலில் மாற்றிய பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது பூஜை பாத்திரம் சுத்தப்படுத்த தேவையான பேஸ்ட் தயாராகி விட்டது. அடுத்து பூஜை பாத்திரத்தை ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக துடைத்த பிறகு இந்த பேஸ்ட்டை அதன் மேல் தெளித்து ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

அதன் பிறகு ஸ்கிரப்பர் வைத்து லேசாக தேய்த்தாலே போதும் பூஜை பாத்திரங்கள் எல்லாம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்து விடும். இதில் ஷாம்பூ, சபினா போன்ற பொருட்கள் சேர்த்து இருப்பதால் எண்ணெய் பிசுக்கு கறையும் எளிதில் விட்டு விடும். இப்படி சுத்தம் செய்யும் போது பூஜை பாத்திரம் சீக்கிரத்தில் கருக்கவும் செய்யாது.

இதையும் படிக்கலாமே: பல பேரும் அறிந்திடாத சின்ன சின்ன சமையலறை குறிப்புகள்.

பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்வதுடன் அதிக நாள் கருகாமல் இருக்க அருமையான இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -