பட்டுப் போல உங்களுடைய முடியை அழகாக வைத்துக் கொள்ள இந்த 1 பொடி போதுங்க. இயற்கையாகவே தலைமுடிக்காக இறைவன் கொடுத்த இந்த வரத்தை நாம் மறந்து விட்டோமே.

hair10
- Advertisement -

நம்முடைய தலைமுடி கருகருவென இருக்க வேண்டும். தலைமுடியில் அழுக்கு இல்லாமல் சுத்தமாக அழகாக இருக்கவேண்டும். தலைக்கு குளிக்க வேண்டும் என்றாலே  இப்போது நம்முடைய நினைவில் முதலில் வந்து நிற்பது ஷாம்பு. அதிலும் காஸ்ட்லியான சூப்பர் பிராண்டட் ஷாம்பு. ஆனால் அந்த காலத்தில் ஷாம்பூ எல்லாம் கிடையாது. சீயக்காய் வைத்து தான் தலைக்கு குளித்து வந்தார்கள். அவர்களுடைய கூந்தல் பள பளன்னு பட்டுப்போல சூப்பராக இருந்தது. இப்போது கூந்தல் எல்லாம் யாருக்குமே கிடையாது. நமக்கு இருப்பது எல்லாம் முடி தான். கருமையான கூந்தலை அடர்த்தியாக பெற சீயக்காயை முறையாக எப்படி பயன்படுத்துவது.

முதலில் 1 கிலோ அளவு சீயக்காய் வாங்கி, 2 நாட்கள் நல்ல வெயிலில் போட்டு காய வைத்துக் கொள்ளுங்கள். 1 கிலோ சியக்காய்கு, 1 கப் பச்சரிசி, 1/2 கப் அளவு வெந்தயம் சேர்த்து ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் நம்முடைய தலை முடிக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு பொடி.

- Advertisement -

சரி, இந்த சீயக்காய் பொடியை முறையாக நம்முடைய தலையில் எப்படி பயன்படுத்துவது. இன்று சாதம் வடிக்கிறீர்கள் அல்லவா. சாதம் வடித்த கஞ்சியை பத்திரமாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடி போட்டு அப்படியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை நீங்கள் தலைக்கு குளிக்க வேண்டும். சாதம் வடித்த கஞ்சியில் உங்களுக்கு தேவையான அளவு சீயக்காய் பொடியை போட்டு முதலில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.

சாதம் வடித்த கஞ்சியில் சீயக்காய் பொடியை கரைத்து வைத்துள்ளீர்கள். அதை அப்படியே அடுப்பில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கரண்டியை வைத்து கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இந்த சீயக்காய் கலவையை கலக்க கலக்க அப்படியே திக்காக லேசான கஞ்சி பதத்திற்கு நமக்கு கிடைக்கும். அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

இந்த கலவையை உங்களுடைய தலையில் போட்டு நன்றாக கசக்கிக் கொள்ள வேண்டும். தலை முடியில் இருக்கும் அழுக்கு சுத்தமாக போய்விடும். முடி வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். முடி ஷைனிங் ஆகவும் இருக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி அடர்த்தியாக முடியை வளரச் செய்ய இயற்கையான வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

இந்த சீயக்காயும் வடித்த கஞ்சி தண்ணியையும் கரைப்பதற்கு அளவுகள் எல்லாம் எதுவும் கிடையாது. உங்களுக்கு தேவையான அளவு சீயக்காய் பவுடர், சீயக்காய்க்கு தேவையான அளவு வடித்த கஞ்சியை ஊற்றி கரைத்து இந்த கலவையை சூடு செய்து தயார் செய்து கொள்ளலாம். சீயக்காயை கஞ்சி தண்ணிரோடு போட்டுக் கரைக்கும் போது கொஞ்சம் தண்ணீராக இருக்கும். அதை அடுப்பின் மேல் வைத்து சூடு பண்ணும்போது கொஞ்சம் கெட்டியாக தொடங்கும். அவ்வளவு தான். நீங்க ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கே தெரியும்.

சில பேர் சீயக்காய் அரைக்கும் போது பச்சரிசி வெந்தயத்துடன் சேர்த்து காய்ந்த எலுமிச்சம் பழத்தோல், காய்ந்த ஆரஞ்சு பழத்தோல், இவைகளையும் சேர்ப்பார்கள். நுரை வர வேண்டும் என்பதற்காக தேவைப்பட்டால் பூந்திக்கொட்டையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சீயக்காய் அரைக்க கொஞ்சம் சிரமம் பார்க்கவேண்டாம். இயற்கையான முறையில் உங்கள் தலைமுடியை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வளர்க்க வேண்டுமென்றால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -