எவ்வளவு அழுக்காக, கருப்பாக இருக்கும் வெள்ளி கொலுசையும் 2 நிமிடத்தில் புதுசு போல மாற்றிவிடலாம்‌. 1 ஸ்பூன் பாண்ட்ஸ் பவுடர் இருந்தால் மட்டும் போதும்.

kolusu
- Advertisement -

பெரும்பாலும் பெண்கள் காதில், கழுத்தில் அணியும் அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுத்தம் செய்வதுபோல, காலில் அணிந்திருக்கும் கொலுசை சுத்தம் செய்ய அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். காலில் இருக்கும் வெள்ளி கொலுசு எப்போதுமே கருப்பாகத்தான் இருக்கும். ஆனால் வெள்ளிக் கொலுசை புத்தம் புதியதாக காலில் அணியும் போது இருக்கக்கூடிய அழகு, அந்த வெள்ளி கொலுசு கருப்பாக அழுக்கு படிந்த பின்பு நமக்கு கிடைக்காது. வெள்ளி கொலுசை எப்போதும் பளபளப்பாக காலில் அணிந்து கொள்ள எந்த பெண்ணுக்கு தான் ஆசை இருக்காது. உங்கள் கொலுசு அடிக்கடி அழுக்கு படிந்து கருத்து போகிறதா. இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள். இரண்டே நிமிடத்தில் கருப்பான வெள்ளிக் கொலுசை பளபளப்பாக மாற்றி விடலாம்.

kolusu

ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு பான்ஸ் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் தடிமனான வெள்ளி கொலுசாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பவுடர் தேவைப்படும். உங்களுடைய கொலுசின் அளவுக்கு ஏற்ப பவுடரை எடுத்துக் கொண்டால் போதும்‌. வெள்ளிக் கொலுசை ஒரு துணியின் மேலோ அல்லது ஒரு தட்டில் வைத்துவிட்டு அந்த கொலுசின் மேலே பான்ஸ் பவுடரை நன்றாக தூவி விட்டு விடுங்கள்.

- Advertisement -

கொலுசுகளின் இடுக்குகளில் பவுடர் செல்லவேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய கப்பில் கொஞ்சமாக நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பல் தேய்க்கும் பழைய பிரஷ் இருந்தால் போதும். அந்த பிரஷ்ஷை தண்ணீரில் தொட்டு, பான்ஸ் பவுடரை தூவி வைத்திருக்கும் கொலுசை லேசாக தேய்த்து கொடுக்க வேண்டும். பிரஷ் கொலுசின் இடுக்குகள் வரை செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

kolusu-cleaning1

கொஞ்சம் கொஞ்சமாக பிரஷில் தண்ணீர் தொட்டு தொட்டு, உங்கள் கொலுசை தேய்த்து கொடுத்தாலே போதும். இரண்டு நிமிடத்தில் உங்களுடைய கொலுசு பளபளப்பாக மாறுவதை நீங்களே பார்க்கலாம். முன்பக்கம் பவுடரை தூவி சுத்தம் செய்து விடுங்கள். பின்பு பின்பக்கமும் அதேபோல் பவுடரை தூவி விட்டு, பிரஷ்ஷை தண்ணீரில் தொட்டு சுத்தம் செய்துவிட்டால் சுலபமாக வேலை முடிந்துவிடும்.

- Advertisement -

பிரஷை கொண்டு கொலுசை நன்றாக தேய்த்து விட்டு, இந்த கொலுசை சுத்தமான நல்ல தண்ணீரில் இரண்டு முறை அலசி எடுத்து விடுங்கள். கொலுசில் இருக்கும் அழுக்கு மொத்தமும் அந்த தண்ணீரிலேயே போய்விடும். அதன் பின்பு ஒரு காட்டன் துணியில் கொலுசை வைத்து சுத்தமாக துடைத்து விட்டால் அழுக்குப் படிந்த கொலுசு சுத்தமாகிவிடும்.

குறிப்பாக நிறைய சலங்கை வைத்த இடுக்கமான டிசைன்களை கொண்ட கொலுசுகளை நம் வீட்டில் சுத்தம் செய்ய முடியாது. கடையில் கொடுத்து தான் பாலிஷ் போடுவோம். ஆனால் உங்க வீட்ல இருக்க ஒரு வெள்ளிக்கொலுசு ஒரே ஒருமுறை இப்படி சுத்தம் செய்தால் நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

kolusu

உங்களுடைய கொலுசு ரொம்ப ரொம்ப கருப்பாக இருக்கிறது என்றால், பவுடரை இரண்டு பக்கமும் தூவி விட்டு 5 லிருந்து 8 நிமிடம் போல அந்த பவுடரை கொலுசில் ஊறவைத்து விட்டு அதன் பின் பிரஷ் கொண்டு தேய்த்தால் சுலபமாக கருப்பு நிறம் நீங்கிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல கருப்பா இருக்கிற கொலுசை ஒருமுறை இப்படி சுத்தம் செய்து ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -