ருத்திராட்சத்தை முறையாக அணிவது எப்படி தெரியுமா ?

8-mukhi-rudhraksha
- Advertisement -

ருத்திரன் என்பது சிவனையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும். மனிதர்களின் நலனுக்காக சிவபெருமான் பல்லாண்டு காலம் கடும் தவம் இருந்து பின் கண்களை திறந்தபோது அவர் கண்களில் இருந்து உருண்டோடியே நீரே உருத்திராட்ச மணிகளாக மாறின என சிவபுராணம் கூறுகிறது. இப்படி பல சிறப்புக்கள் மிக்க ருத்திராட்சத்தை எப்படி அணிவது என்று பார்ப்போம் வாருங்கள்.

ruthratcham

ருத்திராட்சத்தை அணிவதற்கு ஆண் பெண் என பேதம் கிடையாது ஆனால் அதை அணிவதற்கு அணிந்தபிறகும் சில நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

- Advertisement -

ருத்திராட்சத்தை அணிய விரும்புவோர் அதை பற்றி முழுமையாக அறிந்தவரின் துணை கொண்டு கடைகளில் வாங்கவேண்டும். பின் ஒரு வாரம் சுத்தமான பசு நெய்யிலோ அல்லது நல்லெண்ணெயிலோ ஊறவைக்க வேண்டும். அதன் பின் ருத்திராட்சத்தை எலுமிச்சை சாறு கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின் சிவனுக்கு உரிய சுத்தமான திருநீறில் ஒரு நாள் முழுக்க வைக்க வேண்டும்.

ruthratcham

பின் பசும்பால் கொண்டு ருத்திராட்சத்தை கழுவ வேண்டும். அதன் பிறகு நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சிவனின் பாதங்களில் ருத்திராட்சத்தை வைத்து பூஜித்து பின் அதை குருவின் மூலமாகவோ, ஆன்றோர்கள் மூலமாகவோ, சிவனடியார்கள் மூலமாகவோ அணிந்துகொள்ள வேண்டும்.

- Advertisement -

ruthratcham

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பழகுவது சிறந்தது தெரியுமா ?

ருத்திராட்சத்தைப் பார்ப்பதே புண்ணியம், அதை தொட்டால் கோடி புண்ணியம், அதை அணிந்தால் பல கோடி புண்ணியம் என்று கூறப்படுகிறது. தீட்டு நாட்களில் ருத்திராட்சத்தை கழட்டிவிடுவது அவசியம். பெரும்பாலும் இரண்டு முகம், மூன்று முகம், ஐந்து முகம், பதினோரு முகம், பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சங்களே சிவனடியார்களால் போற்றப்படுகிறது. பல சிறப்புக்கள் மிக்க ருத்திராட்சத்தை நீங்களும் அணிந்து பயன்பெறுங்கள்.

- Advertisement -