காலத்தினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் கால பைரவரை எந்த ராசியினர் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

kala-bhairvar-astro

காலமும், இடமும் தான் பூமியை சுழல செய்கிறது. காலம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு பலரும் ”நேரம்” என்று பதில் கூறுவார்கள். காலத்திற்கும், நேரத்திற்கும் வித்தியாசம் உண்டு. காலம் என்பது விதியை குறிக்கும். நேரத்தை அடிப்படையாக வைத்து இன்றைய நவீன அறிவியல் பலவற்றை கண்டுபிடித்தாலும் நமது முன்னோர்கள் நேரத்தை எப்படி கண்டு பிடித்தார்கள்? எந்த உபகரணங்களும் இல்லாத காலத்தில் சுவாசிக்கும் மூச்சை மட்டும் வைத்து காலத்தையும், நேரத்தையும் வென்றவர்கள் நமது முன்னோர்கள். காலையில் எழுந்ததும் வலது நாசியில் தொடங்கும் சுவாசமானது சரியாக 11/2 மணி நேரம் கழித்து இடது நாசிக்கு மாறும். இந்த 11/2 மணி நேரத்தை ஒரு முகூர்த்தமாக அழகாக கணக்கிட்டார்கள். பகல், இரவு என்று மொத்தம் 16 முகூர்த்தங்கள் உள்ளன. 24 மணி நேரம் கிடைத்தாயிற்று. காலம் சாதாரண விஷயம் அல்ல. அப்படிபட்ட இந்த காலத்தை சரியான முறையில் எப்படி வழிபடுவது என்று வழிகாட்டி உள்ளனர் நமது முன்னோர்கள்.

kalabairavar

ஈசனின் 64 திருவுருவங்களில் ஒன்றாக இருப்பது பைரவர். சனி பகவானின் குருவாக திகழ்பவர். காலத்தை கட்டுபடுத்தும் ஆற்றல் பெற்ற கால பைரவரை முறையாக வணங்கினால் அத்துனை துன்பங்களும் நீங்கும் என்கிறது சாஸ்திரம். ஐப்பசியில் வரும் தேய்பிறை அஷ்டமியில் உதித்த கால பைரவர் நம்முடைய தீர்க்கவே முடியாத பிரச்சனைகளையும் தீர்த்து அருள் புரிவார் என்பது ஐதீகம். இவரை எந்த ராசிக்காரர்கள்? எப்படி வழிபட வேண்டும்? என்று இப்பதிவில் இனி காண்போம்.

மேஷம் & விருச்சிகம்:
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் கால பைரவரை செவ்வாய்க் கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும். செவ்வாயில் வரும் அஷ்டமி திதிகளில் மிளகு தீபம் ஏற்றி, பைரவ மூல மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.

ரிஷபம் & துலாம்:
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கால பைரவரை வெள்ளிக் கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வில்வம் மற்றும் செவ்வரளி மலர்கள் சாற்றி வழிபாட்டு வந்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.

- Advertisement -

மிதுனம் & கன்னி:
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் கால பைரவரை புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் விருத்தி கிட்டும்.

kaala bairavar

கடகம்:
கடக ராசிக்காரர்கள் கால பைரவரை திங்கட் கிழமைகளில் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் சாற்றி வழிபாடு செய்து வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சந்தான காப்பு அணிவித்து வணங்கினால் செல்வம் சேரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் கால பைரவரை ஞாயிறு கிழமைகளில் திருமண தடையை நீங்க வேண்டி கொண்டு ராகு காலத்தில் வடை மாலை சாற்றி ருத்ராட்ச அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றினால் திருமணம் உடனே கை கூடிவரும்.

kaala bairavar

தனுசு & மீனம்:
தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் கால பைரவரை வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீய சக்திகள் விலகி நன்மை உண்டாகும். இழுப்பை எண்ணையில் தீபம் ஏற்றி பைரவ மூல மந்திரத்தை உச்சரித்து வந்தால் செல்வம் பெருகும்.

மகரம் & கும்பம்:
மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் கால பைரவரை சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி, செவ்வரளி மலர் சாற்றி வழிபாடுகள் செய்து வந்தால் சனியின் பாதிப்புகள் குறையும்.

Nakshatra

அனைத்து ராசிக்காரர்களும் கால பைரவரை தொடர்ந்து 21 அஷ்டமி திதிகளில் 5 எண்ணைகள் கொண்டு 5 தீபம் ஏற்றி பிரார்த்தனைகளை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுகமான வாழ்வு கிட்டும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்கலாமே
அமாவாசையில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kala bhairava rasi palan. Kala bhairava valipadu Tamil. Kala bhairava worship benefits. Kala bhairava valipadu palan. Kala bhairava valipadu murai in Tamil.