- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகணவன் மனைவி ஒற்றுமையாக வாழ

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ

- Advertisement -

முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தாலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்தால் கூட அவர்களுக்குள்ளே பலவிதமான கருத்து வேறுபாடு சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கிறது.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி அனோன்னியமாக வாழ்கிறார்கள் என்றாலே ஆச்சரியப்படும் வகையில் இன்றைய சூழ்நிலை அமைந்துள்ளது. இந்த பிரிவினைக்கும் மனக்கசப்பிற்கும் பலவிதமான காரணங்கள் இருந்தாலும் அவற்றை என் சரி செய்து வாழ வேண்டும் என்பதை மட்டும் மறுக்க முடியாது.

- Advertisement -

இது போல கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையாக வாழ அருமையான ஒரு பரிகார முறையைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த பிரிவினை எந்த காரணத்தினால் எழுந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் இந்த பரிகாரத்திற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ பரிகாரம்
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். இதற்கு இரண்டு விரலி மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து கணவன் ஆடையிலிருந்து நூலும் மனைவியின் ஆடையில் இருந்து நூலும் எடுத்துக் கொள்ள வேண்டும். நூல் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் உடுத்திய துணியின் ஓரத்தை கிழித்து எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது இரண்டு விரலி மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். முதலாவது விரலி மஞ்சளில் மனைவியினுடைய துணியின் நூலை சுற்றிக் கொள்ளுங்கள். மற்றொரு விரலி மஞ்சள் கணவருடைய துணியின் நூலை சுற்றிக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டையும் ஒன்றாக வைத்து இருவருடைய துணியின் நூலையும் ஒன்றாக கட்ட வேண்டும்.

இதை கட்டும் போது உங்களுடைய இஷ்ட தெய்வம், குலதெய்வம் அனைவரையும் மனதில் நினைத்துக் கொண்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை முழுவதும் இது உங்கள் பூஜை அறையில் இருக்கட்டும். புதன்கிழமை அன்று நீங்கள் கட்டி வைத்த மஞ்சளுடன், மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் புற்று உள்ள ஆலயத்திற்கு செல்லுங்கள்.

- Advertisement -

அங்கு சென்று புற்றில் இந்த மஞ்சளை அதில் போட்டு விடுங்கள் ( புற்றில் இந்த மஞ்சளை போடும் போது கவனமாக போடுங்கள்). அதன் பிறகு புற்றை சுற்றி இந்த மஞ்சளையும், குங்குமத்தையும் கொட்டி விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு வரும் போது அதிலிருந்து கொஞ்சம் மஞ்சளை மட்டும் ஒரு பேப்பரில் மடித்து வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள்.

இந்த மஞ்சளை பூஜை அறையில் வைத்து விடுங்கள். புதன்கிழமை முழுவதும் இந்த மஞ்சள் பூஜை அறையில் இருக்கட்டும். வியாழக்கிழமை அன்று எந்த மஞ்சளை எடுத்து ஆண் பெண் இருவருமே மஞ்சளில் கலந்து குளிக்க வேண்டும். ஒரு வேளை கணவன் மனைவி பிரிந்து இருந்தாலும் யாராவது ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தாலும் பலன் உண்டு.

இதே போல ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வரும் போது பிரிந்த கணவன் மனைவிக்குள் நல்ல மாற்றம் ஏற்பட்டு இருவரும் இணைவதற்கான சூழ்நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய இந்த உறவு முறைகளுக்குரிய ஆணிவேர் ஆதாரமே கணவன் மனைவி உறவு தான். அந்த உறவை சிதறாமல் தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாட்டு முறை

அதற்கு இது போல எளிமையான பரிகாரங்கள் கை கொடுக்கும் எனில் செய்து பார்கலாம் தானே. இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

சற்று முன்