செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாட்டு முறை

sivan5
- Advertisement -

ஆசைப்பட்டு சந்தோஷமாக யாரும் கடனை கைநீட்டி வாங்குவதில்லை. சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும், வறுமையும், கஷ்டமும், நம்மை கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளி விடுகிறது. தீராத கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட, இந்த தை மாத ருண விமோசன பிரதோஷ நாளை தவற விடாதீங்க. ருணம் அப்படி என்றால் நோய் என்று ஒரு பொருள் இருக்கிறது, கடன் என்ற பொருளையும் இது குறிக்கிறது.

இந்த இரண்டுக்குமே செவ்வாய் தான் அதிபதியாக இருக்கின்றார். செவ்வாய்க்கிழமை அன்று வந்திருக்கக்கூடிய பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்தால் நோயில்லாமல் வாழலாம். கடன் இல்லாமல் வாழலாம். அதிலும் குறிப்பாக இந்த ஒரு பாடல் வரிகளை செவ்வாய்க்கிழமை சிவன் கோவில்களில் பாடி சிவபெருமானிடம் மனம் உருகி உங்களுடைய வேண்டுதலை வையுங்கள்.

- Advertisement -

எல்லா பிரச்சனையும் கூடிய சீக்கிரத்தில் சரியாகிவிடும். அந்த சிவபெருமானை மனித ரூபம் எடுத்து உங்கள் கஷ்டங்களை தீர்க்க இறங்கி வருவார் என்பது நம்பிக்கை. சரி செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில் சிவன் வழிபாடு செய்வது எப்படி ஆன்மீகம் சார்ந்த தகவலை தெரிந்து கொள்வோமா.

செவ்வாய்க்கிழமை ருண விமோசன பிரதோஷ வழிபாடு

செவ்வாய்க்கிழமை மாலை நேரம் கட்டாயம் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு போங்க. அந்த விசேஷமான பிரதோஷ பூஜைகள் நடக்கும். அந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள். கூட்டத்தோடு கூட்ட நெரிசலில் போய் சிவபெருமானை பார்க்கணும் என்று அவசியம் கிடையாது.

- Advertisement -

கோவில் வளாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து சிவபெருமானை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன் பிரச்சனை தீரனும். தீராத நோய் தீரனும் என்று நினைத்து அமைதியாக தியானம் செய்யுங்கள். பிறகு தேவாரத்தில் இருந்து திருஞானசம்பந்தர் அருளிய இந்த பாடல் வரிகளை கைபேசியிலோ அல்லது புத்தகத்திலோ பார்த்தே ஒரு முறை படிக்கலாம்.

கடன் தீர்க்கும் பதிகம்

வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர்,
ஏச லில்லையே. 1

- Advertisement -

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3

நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர்,
பேறும் அருளுமே. 4

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாமம் மிழலையீர்,
சேமம் நல்குமே. 5

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10

காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி
மிழலைமேல், தாழும் மொழிகளே. 11

இதையும் படிக்கலாமே: கர்ம வினை தீர முருகர் வழிபாடு

இந்த பாடல் வரிகளை செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் கோவிலில் அமர்ந்த ஒருமுறை படித்துப் பாருங்கள். உங்கள் கடன் பிரச்சனைக்கு முழுமையான தீர்வை அந்த கடவுள் காட்டிக் கொடுப்பான். இதே போல நோய் நொடி உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமை சிவபெருமானை வழிபாடு செய்யலாம். சிவன் கோவில்களில் பிரதோஷ நேரத்தில் இரண்டு மண் நகல் விளக்குகளின் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -