உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஐ.சி.சி

Pakistan

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் பதற்றமான சூழ்நிலை இருப்பதால் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் விளையாடக்கூடாது என்றும் பாகிஸ்தானை உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் எண்டு பலரும் கூறிவருகின்றனர்.

worldcup

இதுகுறித்து பி.சி.சி.ஐ குழு இந்திய வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நாடுகளின் சூழலை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக்கூடாது என்றும் பாகிஸ்தானை இந்த தொடரில் இருந்து முற்றிலும் வெளியேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதற்கு தற்போது ஐ.சி.சி தனது அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதில் ஐ.சி.சி குறிப்பிட்டதாவது : இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் மாற்று கருத்து என்று எதுவும் இல்லை மேலும், இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு எங்காத்து தரப்பில் தரப்படும். நாடுகளை பிரிப்பது எங்களது நோக்கம் அல்ல இந்த போட்டிகளின் மூலம் ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம். மேலும், நாட்டின் பகையை போட்டிகளில் காட்ட வேண்டாம் என்றும் பி.சி.சி.ஐ-க்கு பதிலளித்தது ஐ.சி.சி

icc

இதுவரை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வரப்போகும் தொடரிலும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்கலாமே :

இவர் சொல்வதை நான் கண்ணை மூடிக்கொண்டு செய்கிறேன் அதுவே என் வெற்றிக்கு காரணம் – கேதார் ஜாதவ்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்