எதையெதையோ வைத்து போண்டா செய்து இருப்பீர்கள். ஆனால் ஐஸ்கிரீமை வைத்து சூடாகவும் சில்லுனு போண்டா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஒருமுறை இப்படி செய்து குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள்.

bonda ice cream
- Advertisement -

மாலை நேர சிற்றுண்டி என்று சொன்னதும் அனைவரின் நினைவிற்கு வருவது பஜ்ஜியும், போண்டாவும் தான். ஒரே மாதிரி போண்டா செய்யாமல் வித்தியாச வித்தியாசமாக போண்டாக்களை செய்து நம் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை பார்த்து மகிழ்ந்திருப்போம். அதேபோல் இந்த போண்டாவை செய்து கொடுத்தால் குழந்தைகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த போண்டாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் ஒன்றுதான் ஐஸ்கிரீம். இந்த ஐஸ்கிரீமை வைத்து நாம் ஒரு சுவையான சூடான அதே சமயம் காரமான ஐஸ்கிரீம் போண்டாவை செய்து கொடுத்தோம் என்றால் அனைத்து சுவையும் கலந்த மிகவும் அருமையாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

ஐஸ்கிரீம் போண்டா செய்வதற்கு முதலில் நமக்கு மூன்று துண்டு பிரெட் தேவைப்படும். இந்த பிரட்டை நாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பிரட் ஸ்க்ரப் தேவைப்படும். அதையும் தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் மைதா மாவையும், ஒரு ஸ்பூன் சோளமாவையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஐஸ்கிரீமை ஃப்ரீசரில் வைத்து நன்றாக கெட்டியாக இருக்கும் அளவிற்கு வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் அரைத்து வைத்திருக்கும் பிரெடில் தேவையான அளவு உப்பையும், தேவையான அளவு சில்லி ஃப்ளாக் செய்யும் சேர்க்க வேண்டும். சில்லி ஃப்ளாக்ஸ் இல்லாதவர்கள் மிளகாய் தூளையும் போட்டுக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து புட்டு பதத்திற்கு இருக்கும் அளவிற்கு பிணைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து அதில் போண்டா பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து விட வேண்டும். ஐஸ்கிரீமில் செய்யும் போண்டா என்பதால் எண்ணெய் மிகவும் சூடாக இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது ஒரு உருண்டை அளவு ஐஸ்கிரீமை எடுத்து அதை அரைத்து வைத்திருக்கும் பிரட் தூளில் போட்டு நன்றாக ஐஸ்கிரீம் முழுவதும் படும் அளவிற்கு பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நாம் கரைத்து வைத்திருக்கும் மைதா சோள மாவு கரைசலில் நன்றாக முக்கி எடுத்து மறுபடியும் பிரெட் ஸ்க்ரப்பில் போட்டு நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும். பிறகு இதை நாம் காய வைத்திருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதிக நேரம் எண்ணெயில் வைத்திருந்தால் ஐஸ்கிரீம் உருகிவிடும். மேலே சிவந்தவுடன் போண்டாவை எடுத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாம்: ஹோட்டல் ஸ்டைலில் நல்லா கிரிஸ்பியான அடை தோசை செய்ய இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும். இப்படி செய்தா அடை தோசை பிடிக்காதவங்க கூட இன்னும் ஒன்னு தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க ட்ரை பண்ணி பாருங்க.

குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீமில் போண்டாவை செய்து கொடுத்து வெளியே சூடாகவும் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும் அற்புத சுவை கொண்ட போண்டாவை ருசித்து மகிழுங்கள்.

- Advertisement -