ஹோட்டல் ஸ்டைலில் நல்லா கிரிஸ்பியான அடை தோசை செய்ய இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும். இப்படி செய்தா அடை தோசை பிடிக்காதவங்க கூட இன்னும் ஒன்னு தாங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க ட்ரை பண்ணி பாருங்க.

adai dosai
- Advertisement -

தோசை வகைகளிலே அடை தோசை சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்து மாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு சிற்றுண்டி. ஆனால் பெரும்பாலானருக்கு இந்த அடை தோசை பிடிக்காது காரணம் இதில் பருப்புகள் வெங்காயம் போன்றவற்றை சேர்ப்பது என்றாலும் கூட, இதை நாம் சாதாரண தோசை போல மொறு மொறுவென்று இருக்காது, அப்படி இந்த தோசை ஊற்றவும் முடியாது இந்த சமையல் குறிப்பு பதிவில் வந்த ஹோட்டலில் கிடைப்பது போல மொறுமொறுவென்று கிறிஸ்பியான அடை தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு அடை தோசை செய்முறை விளக்கம்
இந்த தோசை செய்ய முதலில் ஒரு டம்ளர் இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டம்ளர் பச்சரிசி இவை இரண்டையும் ஒரு பவுலில் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிய பிறகு அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடுங்கள். இதில் கட்டாயம் பச்சரிசி சேர்க்க வேண்டும் அப்போது தான் இந்த தோசை நல்லா மொறு மொறுவென்று வரும்.

- Advertisement -

அடுத்து இன்னொரு பவுலில் அரை கப் துவரம் பருப்பு, ரெண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இதையும் கழுவி சுத்தம் செய்த பிறகு இரண்டு மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதில் சேர்த்து இருக்கும் மிளகாயின் அளவை மட்டும் உங்கள் காரத்தின் அளவிற்கேற்றார் போல் கூட குறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கைப்பிடி முருங்கைக் கீரை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கால் கப் தேங்காய் துருவி எடுத்துக் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழித்த பிறகு மிக்ஸி ஜாரில் முதலில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு முறை அரைத்த பிறகு பருப்பை சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுங்கள். அதன் பிறகு அரிசியில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வடித்து விட்டு அரிசியை சேர்த்து அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்த பின்பு லேசான கொரகொரப்பு தன்மையுடன் தோசை மாவுக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாவை ஒரு பவுலில் ஊற்றிய பிறகு கொஞ்சம் மாவை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதம் இருக்கும் மாவை தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்து விடுங்கள். இப்போது உப்பு தேவையானில் கொஞ்சமாக சேர்த்த பின்பு அடுப்பில் தோசை கல் வைத்து இதை எப்போதும் போல் தோசை ஊற்றி பாருங்கள். இந்த தோசை நன்றாக சிவந்து மொறு மொறு என்று பார்க்க சாப்பிடத் தூண்டும் வகையில் அற்புதமாக இருக்கும்.

அடுத்து கொஞ்சமாக எடுத்து வைத்திருக்கும் மாவில் ஏற்கனவே நீங்கள் அரிந்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, தேங்காய் ஒரு ஸ்பூன் சோம்பு இவை எல்லாம் சேர்த்த பிறகு, ஒரு கொத்து கொத்தமல்லி இதையும் பொடியாக நறுக்கி சேர்த்த பின்பு நன்றாக கலந்து விடுங்கள். இப்போது இந்த மாவையும் அதே போல் தோசை கல்லில் ஊற்றுங்கள். இதை கொஞ்சம் தடிமனாக ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் வெங்காயம், கீரை எல்லாம் சேர்த்து இருப்பதால் மெலிதாக ஊற்ற வராது.

இதையும் படிக்கலாமே: கையேந்தி பவன் தக்காளி சட்னியை வீட்டில் செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து செஞ்சு பாருங்க. கடையில் வாங்கி சாப்பிடுற சட்னிக்கு இதுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியாது.

இந்த அளவுகளில் அரிசி பருப்பு எல்லாம் சேர்த்து அரைத்து சுடும் போது நல்ல மொறு மொறு என்று அடை தோசை தயார் செய்யலாம். அதில் மற்ற பொருட்களை எல்லாம் சேர்த்து சாதாரணமான அடை தோசை சாப்பிட விரும்புவர்கள் இது போல சேர்க்கலாம் கட்டாயமாக கீரை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் இதை மறக்காமல் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -