என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை

Love kavithai

அழகிய ஒரு கவி எழுது என்றாள்..
எழுதித் தந்தேன் அவள் பெயரை..
சிறு புன்னகையோடு இது
பழைய பஞ்சாங்கம் என்றாள்..

kadhal kavithai Image
kadhal kavithai Image

அவள் பெயரின் ஒவ்வொரு
எழுத்திலும் ஓராயிரம் கவிதைகள்
ஒளிந்துள்ளதை, பாவம் அவள் அறியவில்லை..

வாடும் மலரும், தேயும் நிலவும்
கவிதையாய் இருக்கும்போது
என் இதயம் கவர்ந்த
என்னவளின் பெயரும்
எனக்கு கவிதை தான்..

Love kavithai Image
Love kavithai Image

இதையும் படிக்கலாமே:
சின்ன பாவை உன் நெஞ்சில் – காதல் கவிதை

காதலிக்கும் ஆண்களுக்கு தன் காதலி எப்போதும் ஒரு பேரழகி தான். அவள் மட்டும் இல்லை அவள் உடுத்தும் உடை முதல் அணியும் செருப்பு வரை அனைத்துமே அழகுதான். அப்படி இருக்கையில் அவளின் பெயர் அவனுக்கு ஆனந்தத்தை தரும் ஒரு அர்ச்சனை மந்திரம். காதலியின் பெயரை கூட காதலிக்கும் ஒவ்வொரு காதலனுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், அன்பை பொழியும் அழகிய சொற்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.