சின்ன பாவை உன் நெஞ்சில் – காதல் கவிதை

Love kavithai

என் கண்களின் கதவை திறந்து
கனவை தீர்மானிப்பவளே..
உன் வண்ண சிரிப்பில் என்
வாழ்க்கையை அலங்கரிப்பவளே..

Kadhal kavithai image
Kadhal kavithai image

சின்ன பாவை உன் காதல் நெஞ்சில்
கொஞ்சி தவழ இடம் வேண்டும்..
உன் கைகள் கோர்த்து சிறு தூரம் நடக்க
தினம் தினம் தவிக்குது எந்தன் மனம்…

ஆசைகள் ஆயிரம் என் மனதில்
அதை அல்லி பருகிட்டே நீ வேண்டும்..
மாலை தென்றலாய் நீ வீச
உன் மடியில் கிடப்பது கோடி சுகம்..

Love kavithai Image tanglish
Love kavithai Image

இதையும் படிக்கலாமே:
காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை

காதலிப்பவர்கள் அனைவருக்கும் மனதில் கோடி ஆசிகள் இருப்பதுண்டு. சிலை அதை சொல்வது கிடையாது, சிலர் அதை உணர்வது கிடையாது. காதலர்கள் தன காதலியிடம் தன ஆசைகளை தெரிவிப்பது போல அமைந்துள்ளது இந்த காதல் கவிதை. காதலர்கள் அனைவருக்கு இது சமர்ப்பணம்.