இட்லி தோசை மாவில் இந்த 1 பொருளை மட்டும் சேர்த்து போண்டா செய்து பாருங்கள். மொறுமொறுன்னு சும்மா டேஸ்ட்ல டீக்கடை போண்டா தோற்றுப் போகும்.

dosa-maavu-bonda_tamil
- Advertisement -

பொதுவாகவே மாலை நேரத்தில் குழந்தைகள் சூடாக ஏதாவது ஒரு தின்பண்டம் தேவை என்று கேட்பார்கள். அதிலும் இப்போதெல்லாம் மாலை நேரத்தில் மழை வந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. அந்த சமயத்தில் டீ குடிக்கும் போது, ஒரு சூடான ஸ்நாக்ஸ் சாப்பிட எல்லோருக்கும் ஆசையாக தான் இருக்கும். அந்த சமயத்தில் வீட்டில் சமைப்பதற்கு எதுவும் இருக்காது. பிரிட்ஜில் இட்லி மாவு தோசை மாவு இருக்கும். அந்த மாவை வைத்து சுலபமான முறையில் ஒரு போண்டா எப்படி சுடுவது என்று தான் இன்று இந்த சமையல் குறிப்பில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாக எல்லோர் வீட்டிலும் இப்படி இட்லி தோசை மாவு வைத்து போண்டா செய்வார்கள். அதில் ஒரு சின்ன வித்தியாசத்தை இன்று நாம் செய்யப் போகின்றோம். புதுசாக ஒரு பொருளை இதில் சேர்த்து போண்டா சுடும்போது, இதனுடைய சுவையும் மணமும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாங்க அந்த இட்லி தோசை மாவில் கலக்கக்கூடிய அந்த ஒரு பொருள் என்ன என்பதையும் ரெசிபியை படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செய்முறை 

வழக்கம் போல ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கப் அளவு இட்லி மாவை சேர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு, சீரகம் 1/2 ஸ்பூன், அரிசி மாவு 1/4 கப், போட்டு இதை கலந்து அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு குக்கரில் இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்குகளை போட்டு, 3 விசில் விட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின்பு, உருளைக்கிழங்கில் இருக்கும் தோலை உரித்து விட்டு, அப்படியே கையால் மசித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் விழுதாக அரைத்து இதை அப்படியே தயாராக இருக்கும் போண்டா மாவில் ஊற்றி விடுங்கள். (உருளைக்கிழங்கு தான் அந்த ஒரு முக்கியமான பொருள்).

- Advertisement -

இப்போது இந்த போண்டா மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, உங்கள் கையை வைத்து நன்றாக பிசைந்து விட வேண்டும். ஏற்கனவே இட்லி தோசை மாவில் உப்பு இருக்கும். உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது உப்பு போட்டு இருப்பீர்கள். ஆகவே தேவையான அளவு மட்டும் பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது போண்டா மாவு தயாராக இருக்கிறது.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த போண்டாவை சுட்டு எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி காய வையுங்கள். போண்டாவை சின்ன சின்ன உருண்டைகளாக உங்கள் கையால் எடுத்து அந்த எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான போண்டா தயார். சாதாரணமாக இட்லி தோசை மாவில் அரிசி மாவு சேர்த்து செய்வதற்கும், இப்படி வேக வைத்த உருளைக்கிழங்கை அரைத்து சேர்த்து போண்டா சுடுவதற்கும் ருசியில் நிறைவே வித்தியாசம் இருக்கும். மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே கொஞ்சம் சாஃப்ட் ஆகவும் சாப்பிட ருசியாகவும் இருக்கும். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, புதினா சட்னி, வெறும் சாஸ் இருந்தால் கூட போதும்.

இதையும் படிக்கலாமே: எலும்புகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உளுந்தை வைத்து இப்படி சத்து மிகுந்த கஞ்சியை செய்து சாப்பிடும் பொழுது எலும்பு தேய்மானத்தில் இருந்து நம் எலும்பை நம்மால் பாதுகாக்க முடியும்.

பின்குறிப்பு:
இந்த போண்டா சுடுவதற்கு ஒரு நாள் புளித்த ஃபிரஷ் ஆன இட்லி தோசை மாவு பயன்படுத்தவும். ரொம்பவும் புளித்த மாவில் போண்டா சுட்டால் சுவையாக இருக்காது. ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -