எலும்புகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உளுந்தை வைத்து இப்படி சத்து மிகுந்த கஞ்சியை செய்து சாப்பிடும் பொழுது எலும்பு தேய்மானத்தில் இருந்து நம் எலும்பை நம்மால் பாதுகாக்க முடியும்.

ulunthu-kanji
- Advertisement -

நமது முன்னோர்கள் அன்றைய காலத்தில் அவர்களுடைய உணவை மிகவும் ஆரோக்கிய உணவாகவே எடுத்துக்கொண்டு வந்தனர். அதனால்தான் அவர்களுக்கு எந்தவித நோய்களும் ஏற்படாமல் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தனர். 90 வயதுகள் வரை யாருடைய துணையும் இன்றி வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த பேச்சுக்கு இடமில்லாமல் 30 வயதை தாண்டினாலேயே மூட்டு வலி, எலும்பு தேய்மானம், இடுப்பு வலி என்று பிறரின் உதவியை எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தீர்ப்பதற்கு சிறுவயதிலிருந்தே உளுந்தை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் உளுந்தை வைத்து உளுந்தங்கஞ்சி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

உளுந்து நம் உடலில் இருக்கக்கூடிய பித்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. உளுந்தை நாம் முறையாக உண்டு வந்தால் எலும்பு தேய்மானம் என்பது மிகவும் தாமதமாகவே ஏற்படும். மேலும் பெண் குழந்தைகள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவாக உளுந்து திகழ்கிறது. அதனால்தான் அன்றைய காலத்தில் பெண்கள் பூப்படையும் பொழுது அவர்களுக்கு உளுந்தங்களி செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை பேணி காத்தார்கள்.

- Advertisement -

செய்முறை 

ஒரு கப் அளவிற்கு உளுந்து (முழு உளுந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்), அதில் அரை கப் அளவிற்கு பச்சரிசியை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்க்க வேண்டும். இவை மூன்றையும் நன்றாக கழுவ வேண்டும். குக்கரில் இதை சேர்த்து அதனுடன் தோல் உரித்த ஐந்து பல் பூண்டை சேர்த்து 400மி.லி அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விட வேண்டும்.

ஐந்து விசில் வரும் வரை குக்கரை அடுப்பில் வைத்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். குக்கரில் விசில் சென்ற பிறகு குக்கரின் மூடியை திறந்து உளுந்தும் வெந்தயமும் நன்றாக மசிய வெந்து விட்டதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேகாத பட்சத்தில் பருப்பு கடையும் மத்தை வைத்து நன்றாக கடைந்து விடலாம். இப்பொழுது மறுபடியும் இந்த குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தேங்காய் பாலை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை கப் அளவிற்கு வெல்லத்தை சேர்த்து அதில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்திருந்து வைக்க வேண்டும். வெல்லம் கரைந்த பிறகு அந்த வெல்ல கரைசலை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி உளுந்தங்கஞ்சியில் ஊற்ற வேண்டும். இதில் ஒரு சிட்டிகை அளவு சுக்குத்தூள் ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக ஒரு கொதி வரும் அளவு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது இந்த உளுந்தங்கஞ்சி தயாராகி விட்டது. இனிப்பு சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமான வடை மோர் குழம்பை இப்படி வச்சு பாருங்க. இந்தக் குழம்பே பிடிக்காதவங்க கூட தட்டு தட்டா சாப்பாடு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

மிகவும் எளிமையாக தயார் செய்யக்கூடிய இந்த உளுந்தங்கஞ்சியை குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு முறையாவது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் காலை உணவாக கொடுப்பதன் மூலம் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

- Advertisement -