இட்லி மீந்து போனால் வேஸ்ட் பண்ணாம இட்லி உப்புமா அல்ல இட்லி மஞ்சூரியன் டேஸ்ட்டியாக சுட சுட இப்படி கூட செய்யலாமே!

idli-manchurian_tamil
- Advertisement -

இட்லி மீந்து போனால் அதை சாப்பிடவே யாருக்கும் பிடிக்காது, ஆனால் அதை வேறு ஒரு வகைகளில் சுடச்சுட செய்து கொடுத்தால் எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். இட்லியை உப்புமா தான் செய்து சாப்பிட வேண்டும் என்று இல்லை, இது போல மசாலாக்களை சேர்த்து மஞ்சூரியன் செய்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். மீந்து போன இட்லியில் அற்புதமான மன்ஜூரியன் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Idli

இட்லி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:
மீந்து போன இட்லி – 6, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், டொமேட்டோ சாஸ் அல்லது சோயா சாஸ் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

இட்லி மஞ்சூரியன் செய்முறை விளக்கம் (Idli Manchurian recipe in Tamil):
இட்லி மஞ்சூரியன் செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீந்து போன இட்லிகளை கியூப் வடிவங்களில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய இட்லி துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

idly-manchurian1

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, சீரகம் சேர்த்து பொன்னிறமாக தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக நீங்கள் குடைமிளகாய் சேர்த்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

- Advertisement -

பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு நறுக்கிய தக்காளி பழங்களையும் சேர்த்து மசிய வதக்குங்கள். பின்னர் இவற்றுடன் மிளகாய் தூள், மல்லி தூள், தனியா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். பின்னர் உங்களிடம் சோயா சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் எது இருந்தாலும் அதில் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்து வதக்குங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஒரே மாதிரி பிரியாணி புலாவ் சாப்பிட்டு போர் அடிக்குதா. ஒரு முறை இந்த பெங்களூர் பிரியாணியை ட்ரை பண்ணி பாருங்க. செம்ம டேஸ்ட்டா இருக்கும்.

இவை அனைத்தும் நன்கு மசிய வதங்கிய பின்பு நீங்கள் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு ரெண்டு நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். மசாலா அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து இட்லியில் இறங்கிய பின்பு நறுக்கிய மல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து அப்படியே சுடச்சுட பரிமாற வேண்டியதுதான். ரொம்பவே ருசியான இந்த இட்லி மஞ்சூரியன் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -