மீந்து போன இட்லிய வைச்சு கூட இப்படி ஒரு அசத்தலான மஞ்சூரியன் டிஷ் செய்யலாம்

Idly manjurian recipe
- Advertisement -

இட்லி மஞ்சூரியன் | Idly Manchurian Recipe Tamil

இட்லி மீந்து போனால் அதை வைத்து நாம் இட்லி உப்புமா செய்வது தான் பழக்கம். இந்த சமையல் குறிப்பு பதிவில் மீந்து போன இட்லியை வைத்து குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையான இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

இட்லி – 4, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – 1கொத்து, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், தனியாத் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் , சோயா சாஸ் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை 

இதை செய்வதற்கு முதலில் இட்லியை கியூப் சைஸில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என அனைத்தையும் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், நறுக்கி வைத்த இட்லி துண்டுகளை அதில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு வைத்து விடுங்கள். எண்ணெய் எல்லாம் வடிந்து விடும்.

- Advertisement -

மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் போட்டு விடுங்கள். சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவை மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். இத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு இவைகளையும் சேர்த்து ஒரு முறை பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

 

- Advertisement -

இப்போது பொரித்து வைத்த இட்லி துண்டுகளை இதில் சேர்த்த பிறகு சோயா சாஸ் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு ஒரு நிமிடம் கழித்ததும் இறக்கி விடுங்கள். இதில் கடைசியாக வெங்காய தால் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி.

இதையும் படிக்கலாமே: இனி மசால் வடை செய்யனும்னா பருப்பே தேவை இல்லங்க. பருப்பு சேர்க்காமல் ஒரு சூப்பரான மசால் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?.

இனி இட்லி மீந்து போனால் எப்போதும் போல உப்புமா செய்யாமல்,  ஒரு முறை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். இனி குழந்தைகள் எப்போது இட்லி மீறும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -