அட, இட்லி மாவில் காரசாரமாக இப்படியும் ஒரு போண்டா சுட்டு எடுக்கலாமா? இது புது ரெசிபியா இருக்கே.

bonda5
- Advertisement -

பெரும்பாலும் இட்லி மாவில் போண்டா சுடுவதற்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த போண்டாவை காரசாரமாக கொஞ்சம் வாசனையாக, கொஞ்சம் வித்தியாசமாக சுட்டு எடுக்கப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் ஒரு நாள் புளித்த இட்லி மாவு இருக்குதா. இன்னைக்கு இந்த போண்டாவை ஈவினிங் ஸ்நாக்ஸாக ட்ரை பண்ணி பாருங்க. சுடச்சுட பத்து போண்டா கொடுத்தா கூட, சூப்பரா சாப்பிட்டு விடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் எதுவும் தேவை இருக்காது. தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய் சட்னி அரைத்து பரிமாறலாம். வாங்க இந்த இன்ட்ரஸ்டிங்கான அருமையான ரெசிபி நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் சுடுதண்ணீரில் மூன்று வரமிளகாயை போட்டு 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸி ஜாரை எடுத்து, அதில் தோலுரித்த பூண்டு பல் – 2, ஊற வைத்திருக்கும் வர மிளகாய் – 3, போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை எழுது போல அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் இட்லி மாவு – 2 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், ரவை – 1 டேபிள் ஸ்பூன், மிக்சி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதை சேர்த்து, இந்த எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன், ஊற்றி கடுகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதங்கி வந்ததும், இதை எடுத்து அப்படியே தயாராக இருக்கும் மாவில் கொட்டி கலக்க வேண்டும்.

- Advertisement -

மாவு பத்து நிமிடம் ஊறி கட்டியாக கிடைத்திருக்கும். காரணம் அதில் நாம் அரிசி மாவு, ரவை எல்லாம் சேர்த்து இருக்கிறோம். போண்டா மாவு பக்குவத்திற்கு அந்த மாவு இப்போது ரெடி.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த போண்டாவை பொறித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, சூடு செய்து கொள்ளவும். இந்த போண்டாவை பக்குவமாக உங்கள் கையால் எடுத்து எண்ணெயில் விட்டு உடனடியாக திருப்பிவிடக் கூடாது. போண்டா எண்ணெய்க்கு அடியில் சென்று மேலே மிதந்து வரும். அதன் பின்பு எல்லா பக்கமும் பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்து சுட சுட பரிமாறினால் சூப்பரான கார போண்டா தயார். ஒரு கப் டீ, இந்த கார போண்டா செம காம்பினேஷன். மிஸ் பண்ணாம இந்த போண்டாவை ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: ரேசன் அரிசியில் ஆப்பம் நல்லா பஞ்சு போல சாப்டா வர இப்படி தான் மாவு அரைக்கணும். இதுக்கு உளுந்து, வெந்தயம், சமையல் சோடா எதுவுமே சேர்க்க தேவை இல்லை. இந்த சூப்பர் டிப்ஸை கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க.

புளிக்காத இட்லி மாவில் இந்த போண்டாவை செய்தால், அதில் கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளவும். ஒரு நாள் புளித்த இட்லி மாவில் இந்த போண்டா செய்தால் ஆப்ப சோடா சேர்க்கத் தேவை கிடையாது. மாவு ரொம்பவும் தண்ணீராக இருந்தால் எண்ணெய் குடிக்கும். அதே சமயம் மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தால் போண்டா சாஃப்ட்டாக கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -