இட்லி மாவு அல்லது தோசை மாவு இருந்தால் போதும். 5 நிமிடத்தில் இப்படி போண்டா சுட்டு சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்.

wheat-bonda
- Advertisement -

புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு எது இருந்தாலும் அதில் விதவிதமாக போண்டா சுடலாம். இன்னைக்கு நாம் பார்க்கப்போகும் போண்டா ரெசிபி இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக சுவையாகத் தான் இருக்கும்.  புளித்த இட்லி அல்லது தோசை மாவில் பின் சொல்லக் கூடிய பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் போண்டா தயார். டீ கொதிக்கும் ஐந்து நிமிடத்தில் இந்த போண்டாவை செய்யலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை பார்த்துவிடுவோம்.

ஒரு அகலமான பௌலில் புளித்த இட்லி மாவு – 1 கப், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

உப்பு சேர்க்கும் போது கவனம் தேவை. இட்லி மாவில் உப்பு இருக்கும் பார்த்து போட்டுக்கோங்க. மாவு பிசையும்போது கொஞ்சம் கட்டியாக இருக்கும். தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இதை இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை ரொம்பவும் தளதளவென பிசைந்து விட்டால் போண்டா எண்ணெய் குடிக்கும். ரொம்பவும் கெட்டியாக பிசைந்து விட்டாலும் போண்டா உள்ளே வேகாதது போல இருக்கும்.

மாவைப் பிசைந்து ஒரு பக்கம் மூடி வைத்துவிடுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து விடுங்கள். அதன் பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு தயாராக இருக்கும் போண்டா மாவில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உங்கள் கையிலேயே மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான போண்டா தயார்.

- Advertisement -

இதற்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும். கொஞ்சம் தண்ணீராக வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு கொத்தமல்லி புதினா வைத்து அரைத்த சட்னியும் சூப்பராக தான் இருக்கும்.

தொட்டுக்கொள்ள சட்னி செய்ய முடியவில்லையா. ஒரு டொமேடோ கெட்சப் வைத்துவிடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சுடச்சுட போண்டாவை இன்னைக்கு மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -