உங்க வீட்டு இட்லி பொடியை, ஒரு வாட்டி இப்படி அரைச்சு பாருங்க! கடையில வாங்கின பொடி போல சூப்பரா இருக்கும்.

idli-podi4

இட்லி பொடி என்றாலே, அது கடையில் வாங்கினால்தான் மணமாக, சுவையாக இருக்கும் என்பது நம் வீட்டில் இருப்பவர்களுடைய கருத்து. இதேபோல் தான், ஹோட்டலில் வைக்கும் இட்லி பொடியும், மிகவும் சுவையோடு இருக்கும். வீட்டில் நம் கையால், செய்த இட்லி பொடியை நம் வீட்டில் இருப்பவர்கள் திருப்பமாக சாப்பிடவே மாட்டார்கள். கடையில் இருக்கும் அதே சுவையோடு, நம் வீட்டிலும், ஒரு சூப்பர் இட்லி பொடியை தயார் செய்ய முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

idli-podi

இட்லி பொடியை அரைப்பதற்கு, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவும், வறுபடும் பக்குவமும் தான் மிகவும் முக்கியம். சேர்க்கப்படும் பொருட்களின் அளவு மாறினாலும், சிவக்கும் தன்மை மாறினாலும், பொடியின் ருசி பக்குவமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இட்லி பொடி அரைக்க தேவையான, பொருட்களின் சரியான அளவு இதுதான்:
கடலைப் பருப்பு – 100 கிராம், உளுந்து – 100 கிராம், பெருங்காயம் – 10 கிராம், பூண்டு – 10 பல் (தோல் உரிக்க வேண்டாம்) எள்ளு – 60 கிராம், காஷ்மீரி மிளகாய் – 30 கிராம், வரமிளகாய் – 6, கறிவேப்பிலை – 2 கொத்து, கல்லுப்பு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், வரமல்லி – 1/4 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன்.

idli-podi

Step 1:
தடிமனான கடாயை அடுப்பில் வைத்து, முதலில் கடலைப்பருப்பை சிவப்பு நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, உளுத்தம்பருப்பை கொட்டி சிவப்பு நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பருப்பையும் தனித்தனியாக தான் வறுக்க வேண்டும். வறுத்தெடுக்கும் போது, ஒன்றாகக் கொட்டி, நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக அதே கடாயில், வரமிளகாயை மொறுமொறு வென்று, உடையும் பக்குவத்திற்கு வறுக்க வேண்டும். எள்ளையும் பட பட வென்று, வருபடும் அளவிற்கு, வறுத்து, வரமிளகாயோடு சேர்த்து ஆர வைத்துக் கொள்ளுங்கள்.

Step 3:
அதே கடாயில், மீதமுள்ள பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து,  பொன்னிறமாக, தனித்தனியாக வறுக்க வேண்டும். பெருங்காயம், பூண்டு, கருவேப்பிலை, உப்பு, சீரகம், வர மல்லி, உப்பு இந்தப் பொருட்களை, தனித்தனியாக வறுத்து தான் ஒரே கிண்ணத்தில் போட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். (வறுத்த பின்பு ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.)

Step 4:
இப்போது எப்படி அரைக்க போகின்றோம் என்பதையும் பார்த்துவிடலாம். அரைப்பதில் கூட பக்குவம் உள்ளது! முதலில் காய்ந்த மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் முதலில் நறநறப்பாக அரைத்து தனி பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

idli-podi2

அதே மிக்ஸியில் இரண்டாவதாக வர மிளகாய், எள்ளு, பொட்டுகடலை இந்த மூன்று பொருட்களையும் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதே மிக்ஸியில் மூன்றாவதாக தனியாக வறுத்து வைத்திருக்கிறோம் அல்லவா? பெருங்காயம், பூண்டு, எள்ளு, ஜீரகம், வரமிளகாய், மல்லி, உப்பு இந்த பொருட்களை போட்டு ஒரு ஓட்டு ஓட்டுவிட்டு, இப்போது இந்த இடத்தில் அரைத்து வைத்திருக்கும், உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொடியையும், மிளகாய் எல்லு பொடியையும், ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து உங்களுக்கு தேவையான பக்குவத்தில் அரைத்து எடுத்தால் வாசனையான இட்லி பொடி தயார்!

idli-podi3

பின்குறிப்பு: இந்த பொருட்களை எல்லாம் வெறும் வானவில் தான், வறுத்து எடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டும், மசாலாப் பொருட்களை வறுத்து எடுக்கலாம். ஆனால், எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை வறுத்து எடுக்கும் போது, பொடியை நீண்ட நாட்களுக்கு எடுத்து வைக்க முடியாது. லேசாக சிக்கு வாசனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பத்திலிருந்து, பதினைந்து நாட்களுக்குள், பொடி தீர்ந்து விடும் என்றால், என்னை விட்டு மசாலா பொருட்களையும், பருப்பையும் வறுத்து எடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே
வெறும் நூடுல்சை வாங்கிட்டு வந்து எப்படி ‘வெஜ் நூடுல்ஸ்’ செய்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.