10 வருடமாக உங்கள் வீட்டில் இட்லி பாத்திரம் உப்பு கறை படிந்து இப்படி இருக்குதா? 10 நிமிடத்தில் இதை பள பளன்னு மாத்தலாம் வாங்க.

idli-pot
- Advertisement -

சில பேர் வீடுகளில் நீண்ட நாட்களாக இட்லி பாத்திரத்தை பயன்படுத்தி வருவார்கள். இட்லி பாத்திரம் மட்டுமல்ல நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்து வரும் குக்கர், அலுமினிய பாத்திரங்கள் கூட அடியில் உப்பு கறை படிந்து மிகவும் மோசமான நிலைமையில் இருக்கும். உப்பு கறை படிந்து இருக்கக்கூடிய இந்த பாத்திரங்களை மிக மிக சுலபமான முறையில் குறைந்த செலவில் கை வலிக்காமல் பத்தி நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

துணி துவைக்க கூடிய எந்த சோப்பை வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். கேரட் துருவுவோம் அல்லவா, அதில் சோப்பை துருவி தூள் சோப்பை எடுத்துக் கொள்ளுங்கள். துருவிய இந்த சோப்பு தூள் 1 ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த சோப்புத்தூளுடன் 1 டேபிள்ஸ்பூன் ஹேர் பிக்கை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.

- Advertisement -

இந்த கலவையை இட்லி பாத்திரத்திற்கு உள்ளே நன்றாக தடவி விட்டு விடுங்கள். ஒரு ஸ்பான்ச் நாரை கொண்டு தடவி விட்டால் கூட போதும். அதன் பின்பு இதற்கு மேலே நாம் தூவ வேண்டிய பொருள் சாம்பல் அல்லது கறி துகள்கள். charcoal powder என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த கரி துண்டு கிடைத்தாலும், அதை பொடி செய்து இதில் தூவிக் கொள்ளலாம் அல்லது சாம்பல் இருந்தாலும் அதை தூவி கொள்ளலாம். இந்த இரண்டு பொருட்களில் ஏதாவது ஒன்று கட்டாயம் தேவை.

இப்போது கறை படிந்த இடத்தில் தடவிய இந்த பொருட்கள் எல்லாம் 15 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வேண்டும். (துணி துவைக்கும் சோப், ஹேர்பிக், சாம்பல் பொடி இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த கலவை) 15 நிமிடங்கள் ஊறிய பின்பு லேசாக ஒரு நாரை கொண்டு தேய்த்து, தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை அலசி கீழே கொட்டி விடுங்கள். உள்ளே இருக்கக்கூடிய ஹேர்பிக் சோப்பு எல்லாம் போய்விடும். கறை நன்றாக ஊறி இருக்கும். 10 ரூபாய்க்கு உப்பு காகிதம் விற்கிறது. அதிலிருந்து ஒரு சிறிய துண்டை கிழித்து எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, இந்த உப்பு காகிதத்தை போட்டு தேய்த்து எடுத்தால் உங்கள் வீட்டு இட்லி பாத்திரம் எப்படி மாறுகிறது என்பதை நீங்களே பாருங்கள்.

- Advertisement -

உப்பு காகிதம் வாங்க முடியவில்லை என்றால் ஸ்டீல் ஸ்க்ரப்பரை போட்டு தேய்த்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முதலில் கிழித்த சிறிய துண்டு உப்பு காகிதத்தை வைத்தே மொத்தமாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி புதுசாக உப்பு காகிதத்தை எடுத்து தேய்க்கும் போது பாத்திரத்தில் நிறைய கீறல் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. கழிவறைக்கு பயன்படுத்தக்கூடிய ஹேர்பிக்கை சமையல் பாத்திரத்திற்கு பயன்படுத்துகின்றோமே என்று நினைக்க வேண்டாம். கழிவறைக்கு பயன்படுத்துவதற்கு முன்பே புதியதாக வாங்கிய ஹேர்பிக்கு இதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் தவறு ஒன்றும் கிடையாது.

பல நாள் படிந்திருந்த உப்பு கறையாக இருந்தாலும் பத்தே நிமிடத்தில் கறை சூப்பராக நீங்கிவிடும். இதே போல தான் சுடுதண்ணீர் வைக்கக்கூடிய பாத்திரம், குக்கர் போன்ற பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்டு இட்லி பாத்திரம் மட்டும் எப்படி இப்படி பளபளப்பாக இருக்கிறது என்று வீட்டுக்கு வரவங்க எல்லோரும் கேட்பார்கள்.

- Advertisement -