இட்லி அவிக்கிறப்போ துணியில் இட்லி ஒட்டாமல் வருவதற்கு யாருக்கும் தெரியாத நச்சுனு 4 டிப்ஸ்?

idly-recipe
- Advertisement -

இட்லி பஞ்சு போல் மென்மையாக வருவதற்கு கட்டாயம் காட்டன் துணி பயன்படுத்துவது அவசியமாகிறது. காட்டன் துணி பயன்படுத்தாமல் அப்படியே இட்லி தட்டில் மாவை ஊற்றினால் அந்த அளவிற்கு இட்லி மென்மையாக வருவதில்லை. அப்படி ஊற்றும் பொழுது தட்டின் குழியில் எண்ணெய் தடவி விட்டு ஊற்றினால் தட்டில் ஒட்டாமல் இட்லி அழகாக வரும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் துணி போட்டு இட்லி எடுப்பவர்களுக்கு சிறிதும் ஒட்டாமல் லாவகமாக இட்லியை எப்படி எடுப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

idly 3

முதலில் இட்லியை வைப்பதற்கு என்று தனியாக சுத்தமான காட்டன் துணியை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலானோர் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் வேஷ்டியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வேஷ்டி முற்றிலும் பருத்தியால் செய்யப்பட்டதை அல்ல. அதில் பாலிஸ்டர் கலந்து இருப்பதால் அதனை இட்லி ஊற்ற பயன்படுத்துவதை விட, பியூர் காட்டன் வேஷ்டி பயன்படுத்தினால் இட்லி சூப்பராக வரும். இட்லி துணியை கண்டிப்பாக நேரம் கிடைக்கும் பொழுது வெயிலில் உலர்த்தி எடுத்து வைப்பது அவசியமாகிறது. இட்லி துணியில் இருக்கும் நுண்கிருமிகள் இதன் மூலம் அழிக்கப்படும்.

- Advertisement -

அது போல் ஒவ்வொரு முறை இட்லி ஊற்றும் பொழுதும் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் சூடேறியதும் ஒரு முறை அந்த துணியை தண்ணீரில் நனைத்து எடுத்து பின்னர் பயன்படுத்தலாம். நீங்கள் இட்லிக்கு ஊற்றும் மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கி விட்டு பின்னர் இட்லி தட்டில் அவிய விட்டு எடுத்தால் இட்லி ஒட்டாமல் சூப்பராக வரும்.

idly-cloth

இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் இட்லி பஞ்சு போல் சூப்பராக வரும். மேலும் இட்லி துணியில் ஒட்டாமல் வரும். இட்லி தட்டில் இருந்து இட்லியை எடுக்கும் முன்னர் சிறிதளவு சுத்தமான தண்ணீரை தெளித்து விட்டு எடுப்பது ஒட்டாமல் வருவதற்கு உதவியாக இருக்கும். அவசரமாக இட்லியை எடுக்க விரும்புபவர்கள் இட்லி தட்டை பின்புறமாக தண்ணீர் குழாயில் தண்ணீரை திறந்து விட்டு காண்பிக்க வேண்டும். அதற்கு பிறகு இட்லியை எடுத்தால் தட்டில் அல்லது துணியில் ஒட்டாமல் இட்லி அழகாக சீக்கிரமாக வந்து விடும்.

- Advertisement -

இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது நாம் சேர்க்கும் பொருட்களும் இட்லி துணியில் இட்லி ஒட்டாமல் வருவதற்கு உதவி செய்யும். மேலும் குஷ்பூ இட்லி போல் மெத்தென்று வரவும் சிறந்ததாக இருக்கும். இட்லிக்கு மாவு அரைக்கும் பதமும், இட்லி ஒட்டாமல் வருவதற்கு ஒரு காரணம் தான். நாலு பங்கு இட்லி அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து சேர்த்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி, ஒரு தேக்கரண்டி வெள்ளை அவல் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் இட்லி குஷ்பு இட்லி போல் வாயில் கரையும் அளவிற்கு அவிந்து வரும். மேலும் இது போன்ற பதத்தில் இட்லியை அவித்து எடுக்கும் பொழுது துணியில் ஒட்டாமல் வரும்.

idly-cloth1

இட்லி அவிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிகவும் முக்கியமானது என்றால் அது இட்லி அவிக்கும் நேரம் என்பது தான். பத்து நிமிடத்திற்கு மேல் இட்லியை அவிக்க வேண்டிய அவசியமில்லை. சரியாக பத்து நிமிடத்தில் இட்லி அவிந்து வர வேண்டும். அது தான் இட்லியின் சரியான பதம் ஆகும். இந்த முறையில் இட்லி அவித்தால் தான் இட்லி துணியில் இட்லி சிறிதும் ஒட்டாமல் லாவகமாக வரும்.

இதையும் படிக்கலாமே
காரசாரமான மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை! வெறும் 10 நிமிஷம் போதுமே இந்த ரெசிபி செய்ய.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -