உங்கள் வீட்டு உருளியில் தண்ணீர், பூவுடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்தால், உங்கள் வீடும் கோவிலாக மாறும்.

uruli3
- Advertisement -

நம்முடைய எல்லோரது வீட்டிலும் ஒரு உருளியில் தண்ணீர் விட்டு, அதில் பூக்களை மிதக்க விடுவதை வழக்கமாக வைத்திருப்போம். இது எதற்காக வைக்கப்படுகிறது! என்பது சிலபேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது. வீட்டின் அழகுக்காகவும், பூவினால் மங்களகரம் நிறைந்திருக்கும் என்பதற்காகவும், இதை நம் வீட்டில் வைத்து உள்ளோம் என்றும் சிலர் நினைக்கிறார்கள்! ஆனால் இந்த உருளியில் தண்ணீர் விட்டு, பூ போட்டு வைப்பதற்கு உண்மையான காரணம் எதுவாக இருக்கும்? என்பதையும், இப்படியாக நாம் தயார் செய்யும் உருளியை எந்த இடத்தில் வைக்கலாம்? அந்த நீருடன் என்ன பொருளை கலந்து வைப்பதால், நமக்கு நல்ல பலனை தரம். என்பதை பற்றி தெரிந்துகொள்ள தான் இந்த பதிவு.

uruli

உருளி என்பது எந்த உலோகத்தில் வைக்கலாம்? ஐம்பொன், பித்தளை, வெள்ளி, தங்கம், இதில் எந்த வகை உலோகத்தால் செய்யப்பட்ட உருளியாக இருந்தாலும் அதை, நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இதுதவிர கண்ணாடி, பீங்கான், மண்  உறுளிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம் வசதியைப் பொறுத்தது. கட்டாயமாக எவர்சில்வர், இரும்பு, அலுமினியம் இந்தவகை உருளைகளை நம் வீட்டில் பயன்படுத்தக்கூடாது. நாம் தயார் செய்த உரளியை, அதாவது தண்ணீர் ஊற்றி, பூ போட்டு வைத்திருக்கும் உருளியை நம் வீட்டு வாசலிலும் வைக்கலாம். அல்லது நம் வீட்டு வரவேற்பறையில் வைக்கலாம். அதாவது ஹால்.

- Advertisement -

இப்படி தண்ணீரில் பூ போட்டு வைக்கும் இந்த பழக்கமானது நமக்கு அதிகப்படியான நேர்மறை ஆற்றலை தருகிறது. நம் வீட்டிற்கு வருபவர்கள் நம் வீட்டை பார்த்து இவ்வளவு பெரிய வீடா! என்று எதிர்மறை சிந்தனையோடு, கண்திருஷ்டி வைத்தாலும், இவ்வளவு சின்ன வீட்டை எவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்களே! என்று நினைத்தாலும் அந்த தோஷமானது நம்மை தாக்காது. இந்த தண்ணீர் கெட்ட ஆற்றலை உறிஞ்சிக் கொண்டு, நல்ல ஆற்றலை மட்டுமே நமக்கு வெளிப்படுத்தும். இதற்காகத்தான் பெரிய பெரிய ஹோட்டல்கள், பெரிய அலுவலகங்கள் இப்படிப்பட்ட இடங்களில் இந்த உருளியை, பெரிய அளவில் வரவேற்பறையிலேயே வைத்திருப்பார்கள்.

uruli1

நம்முடைய வீட்டிலும் இந்த உறுதியை வைப்பது மிக நல்ல பலனை தரும். இந்த உருளியில் ஊற்றப்படும் தண்ணீரோடு சிறிதளவு ‘ஜவ்வாது பொடியை’ கலந்து கொள்ளுங்கள். இந்த நறுமணம் நம் வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றலை பரவச் செய்யும். நம் வீடு கோவிலாக மாறும் அளவிற்கு இந்த வாசம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். அதோடு நீங்கள் தண்ணீரில் போடப்படும் பூக்களின் காம்புகளை எக்காரணத்தைக் கொண்டும் கிள்ளி விட வேண்டாம். காம்புகளோடு இருக்கும் பூக்களை பயன்படுத்துவது மிக நல்லது. உருளியில் இருக்கும் தண்ணீரில் வாசனை மிகுந்த பூக்களையும், மருத்துவ குணம் நிறைந்த பூக்களையும் போட்டு வைப்பது மிகவும் நல்லது. பூக்களை முழுதாக தான் போட வேண்டுமே தவிர, பூக்களின் இதழ்களை எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் கைகளால் உதிர்த்து போட கூடாது. அதாவது பூக்களை பிச்சு போடுவது என்பது மிகவும் தவறான ஒன்று.

- Advertisement -

நம் வீட்டு உருளியில் இருக்கும் தண்ணீரை தினம்தோறும் மாற்றுவதுதான் நல்லது. என்றும் தூசு படிந்து காணப்படக் கூடாது. உருளியில் இருக்கும் பூக்கள் வாடாமல் இருந்தால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூட மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தண்ணீரை தினம்தோறும் மறக்காமல் மாற்றிவிட வேண்டும். பூக்களை மட்டும் எடுத்து தனியாக வைத்துவிட்டு, தண்ணீரை மாற்றி விட்டு வாடாத பூக்களை திருப்பி போட்டுக்கொள்ளலாம்.

uruli2

எந்த ஒரு வழக்கத்தையும், முறைப்படி கடைப்பிடிப்பது தான் நல்லது. நாம் செய்த ஒரு விஷயத்திற்கு பலன் கிடைக்காமல் போகிறது என்றால், அதில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளும் அடங்கும். ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, நாம் பின்பற்ற வேண்டுமே தவிர அரைகுறையாக எல்லாப் பரிகாரங்களையும் செய்து விட்டு, பலன் கிடைக்கவில்லை என்று குறை கூறுவது மிகவும் தவறான ஒன்று.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
ஸ்படிக மாலை அணிந்தால் என்னென்ன அற்புதங்கள் உங்களுக்குள் நடக்கும் தெரியுமா? யாரெல்லாம் இதை அணியலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Uruli benefits in Tamil. Vastu flower bowl in Tamil. Uruli in Tamil. Uruli with flowers. Flowers in water bowl benefits. Where to keep flower bowl at Home.

- Advertisement -