ஸ்படிக மாலை அணிந்தால் என்னென்ன அற்புதங்கள் உங்களுக்குள் நடக்கும் தெரியுமா? யாரெல்லாம் இதை அணியலாம்?

spadigam1

ஸ்படிகம் என்பது ஒரு விதமான பாறை வகையை சார்ந்தது. இது பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக புதையுண்ட நீர் இறுகி பாறைகளாக உருமாற்றம் அடைந்தவை. இந்த ஸ்படிக பாறையை சுத்தம் செய்து பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்கின்றனர். 1 முதல் 10 வரை தரம் பிரிக்கப்பட்டு கிடைக்கும். அதில் முதல் தரம் வாய்ந்த ஸ்படிகம் மிகவும் தெய்வீக சக்தி கொண்டவை. ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஸ்படிகம் சிறப்பு மிக்க பயன்களை அள்ளி தருபவை. இந்த ஸ்படிகத்தை மாலையாக எப்படி கோர்க்கலாம்? அந்த மாலையை யாரெல்லாம் அணியலாம்? அப்படி அணிந்தால் உங்களுக்குள் என்னென்ன அற்புதங்கள் நிகழும் என்று மேற்கொண்டு இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

crystal-lingam1

ஸ்படிகம் ஒரு மணி நேரத்திற்கு நாம் ஒரு நாளில் விடும் மூச்சின் எண்ணிக்கையில் அதிர்வலைகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது. அதனால் அபரிமிதமான சக்திகளை தன்னகத்தே கொண்டு அமைதியாக விளங்குகிறது. ஸ்படிகத்தில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் போன்ற சிலைகள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு அதன் ஈர்ப்பு சக்தியால் பல நன்மைகள் கிடைக்கும். வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்தாலே போதும். இறைவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

ஸ்படிக மாலையை எப்படி செய்வது?
ஸ்படிக மணிகளை எந்த உலோகத்தினோடும் இணைக்கக் கூடாது. ருத்ராட்சம் கொண்டும் சேர்க்கக் கூடாது. தங்கம் அல்லது வெள்ளியால் கோர்த்து மாலையாக செய்து கொள்ளலாம்.

spadigam2

ஸ்படிக மாலையை யாரெல்லாம் அணியலாம்?
ஸ்படிக மாலையை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்கள், குளிர்ச்சியான உடல் தன்மை பெற்றவர்கள் கண்டிப்பாக அணிவதை தவிர்க்க வேண்டும். இவர்களை தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி யார் வேண்டுமானாலும் அணியலாம். அதிகம் கோபப்படும் நபர்கள், பிளட் பிரஷர் இருப்பவர்கள், உஷ்ண உடம்பு கொண்டவர்கள் கட்டாயம் அணியலாம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

ஸ்படிக மாலை அணிவதால் என்ன பலன் கிடைக்கும்?
ஸ்படிக மாலையை அணிவதால் தெய்வ அருள் கிடைக்கும், அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பதால் நல்ல எண்ணங்களை விதைக்க செய்யும், மனதை அமைதியாக வைத்திருக்க உதவும், தெளிவான சிந்தனையை தரும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும், உஷ்ணத்தை குறைத்து உங்களை குளிர்ச்சியுடன் வைக்கும், தீய சக்திகளை நெருங்க விடாமல் காக்கும்.

spadigam3

ஸ்படிக மாலை அணியும்போது விதிமுறைகள் என்ன?
ஸ்படிக மாலை அணிந்து கொள்வதற்கு முன் குறைந்தது 3 மணி நேரம் வரை நல்ல தண்ணீரில் போட்டு விடவேண்டும். அதன் பின்னர் எடுத்து பயன்படுத்தலாம். வேறொருவர் அதை அணிந்தாலும் இதே போல் செய்ய வேண்டும். குளிக்கும் போதும் போட்டு கொண்டே குளிக்க வேண்டும். இரவில் உறங்கும் போது கட்டாயம் அவிழ்த்து தரையில் வைக்க வேண்டும். காலையில் நீங்கள் அணியும் போது மாலை குளிர்ச்சியாக இருக்கும். நாள் முழுவதும் உங்களது உஷ்ணத்தை இந்த ஸ்படிகம் ஈர்த்து கொண்டிருக்கும். இரவில் நீங்கள் கழற்றி வைக்கும் போது மாலை உஷ்ணமாகி விடும். தரையில் வைப்பதால் பூமியின் ஈர்ப்பு சக்தி பெற்று மீண்டும் குளிர்ந்த நிலைக்கு செல்லும்.

ஸ்படிக ஜப மாலை பயன்கள்?
ஸ்படிக மாலையை ஜப மாலையாக உபயோகிக்கும் போது அதற்கென்று தனியாக வைத்து கொள்வது நல்லது. அல்லது அணியும் மாலையையும் உபயோகிக்கலாம். இறைவனின் நாமத்தை உச்சரித்து ஸ்படிக மாலையை உருட்டும் போது மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும், மன பாரம், மன அழுத்தம் குறைந்து சாந்தமாக வைக்கும்.

spadigam

ஸ்படிகம் தரமானது என்று கண்டுபிடிப்பது எப்படி?
முதல் தரம் வாய்ந்த ஸ்படிகத்தை தொட்டவுடன் குளிர்ச்சியை வெளிபடுத்தும். நீரில் போட்டால் கண்களுக்கு புலப்படாது. நீரோடு ஒன்றி இருக்கும் சக்தி பெற்றது ஸ்படிகம். எனவே தரம் வாய்ந்த ஸ்படிகத்தை வாங்கி பயன்படுத்தி நன்மைகளை அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் மன பயத்தை போக்கும் கல் உப்பு பரிகாரம். 21 நாட்களில் பலனை கட்டாயம் உணர்வீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Spadikam malai benefits in Tamil. Spadiga malai uses. Spadikam maalai original. Padigam malai benefits in Tamil. Sphatik mala wearing rules in Tamil.