பிரியாணி இலையை எரித்தால் என்ன அதிசயம் நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

bay-leaf-burning

தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், மனிதர்களுக்கு மன அழுத்தமும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது என்று கூறினால் அது பொய்யாகாது. பகலில் வேலை செய்துவிட்டு இரவில் தூங்கும் காலம் மறைந்து, இரவு முழுவதும் வேலை செய்து பகல் பொழுதில் தூங்கி தேவையில்லாத மன அழுத்தத்தை கொடுக்கும் வாழ்க்கை முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட வேலைக்கு எவ்வளவு தான் ஊதியம் பெறப்பட்டாலும் இரவு தூக்கத்தை இழப்பதற்கு அது சமமாகுமா? இரவு தூக்கத்தை இழந்து விட்டு மன அழுத்தம் என்று கூறி, மன அமைதியைத் தேடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக மசாஜ் சென்டர், பார், இன்னும் செல்லக்கூடாத இப்படிப்பட்ட பல இடங்களைத் தேடிச் சென்று பணத்தையும் செலவழித்து, தேவையில்லாத கெட்ட பழக்கத்திற்கும் அடிமை ஆகின்றோம். இனி உங்களது மனதை அமைதி படுத்துவதற்கு இப்படிப்பட்ட வழிகள் எல்லாம் தேவையில்லை. ஒரு சுலபமான இயற்கையான வழியைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bay-leaf

நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் பிரியாணி இலை. இதற்கு நல்ல நறுமணம் வீசும் தன்மை உண்டு. இந்த இலையானது சமையலுக்கு வெறும் ருசியை மட்டும் கொடுக்கவில்லை நமக்கு ஆரோக்கியத்தையும் தான் சேர்த்து கொடுக்கிறது. இந்த பிரியாணி இலையானது மன அழுத்தத்தை குறைக்கின்றது என்பதை ரஷ்யாவில் கென்னடி என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். எப்படி?

10 பிரியாணி இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பை மூட்டி பற்ற வைத்து விடுங்கள். 15 நிமிடங்களுக்கு அந்தப் பாத்திரத்தை ஒரு அறையினுள் வைத்துவிட வேண்டும். அந்த இலைகள் எரியும் போது அதன் நறுமணமும், புகையும் அந்த அறை முழுவதும் பரவிவிடும். பின்பு நாம் அந்த அறைக்குள் வசிக்கும் போது, அந்தக் பிரியாணி இலையின் நறுமணம் கலந்த வாசனையை சுவாசிக்கும்போது நம் மன அழுத்தமானது  குறைக்கப்படுவதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் உடலில் மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன் சுரப்பிகள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் துர்நாற்றம் மறைந்து, நறுமணம் வீசும். சந்தோஷத்தைக் கொடுக்கும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி நறுமணமான சூழ்நிலையில் நம் மனது அமைதி அடையும் போது மன அழுத்தம் தானாக குறைந்து விடும். இது ஒரு பக்கமிருக்க பிரியாணி இலையின் தாந்திரீக வழி ஒன்று உள்ளது. அந்த ரகசியத்தை பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்.

bay-leaf1

அதாவது ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொண்டு அந்த பிரியாணி இலையின் மீது நம் மனதில் வைத்திருக்கும் குறிக்கோளை ஒன்றை எழுதி, அந்த பிரியாணி இலையை முழுமையாக எரித்து விட்டால், நம் மனதில் எதை நினைத்தோமோ அது நிச்சயம் நடக்கும் என்று கூறுகிறது ஒரு மாந்திரீக பரிகாரம். அதாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு உங்கள் மனதில் இருந்தால், ‘எனக்கு நல்ல வருமானம் தரும் ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று’ முயற்சி செய்து பாருங்கள். ஆனால் ‘நான் தூங்கி எழுந்தவுடன் கூரையைப் பிச்சுக்கொண்டு பணம் கொட்ட வேண்டும்’ ‘தூங்கி எழுந்தவுடன் என் கைகளில் கோடிரூபாய் இருக்கவேண்டும்’ இப்படியெல்லாம் விதண்டாவாதமாக செய்து பார்க்கக் கூடாது. உங்களது வாழ்க்கையில் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு நியாயமான ஆசையை வைத்து செயல்படுத்திப் பாருங்கள். நினைத்ததை நிறைவேற்றும் இந்த பரிகாரத்தை நம் செய்து தான் பார்க்கலாமே அதில் எந்த தவறும் இல்லை.

இதையும் படிக்கலாமே
காசியில் சாபம் பெற்ற பல்லி மற்றும் கருடன் இன்றும் தொடரும் அதிசயங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bay leaf spiritual benefits. Burning bay leaves for prosperity. Burning bay leaves spiritual. Bay leaf spiritual uses.