இவைகள் எல்லாம் உங்கள் கனவில் வந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்!

insect-kanavu-palan

இரவு, நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, வரும் காட்சிகளை தான் கனவு என்று சொல்கின்றோம். இதில் சில கனவுகள் நமக்கு எதற்காக வந்தது என்றே தெரியாது. சம்பந்த சம்பந்தமே இல்லாமல் சில சமயங்களில் கனவு வருவது இயற்கைதான். சில கனவுகளை ஆராய்ந்து பார்த்தால், அதற்குப்பின் பெரியதாக எந்த ஒரு பின்னணியும் இருக்காது. எங்கேயோ எப்போதோ கேள்விப்பட்ட சம்பவத்தை மனதில் நினைத்து தூங்கும்போது, அல்லது வித்தியாசமான திரைப்படங்களைப் பார்த்து விட்டு தூங்கும் போது, வித்தியாசமான கதைப் புத்தகங்களை படித்து விட்டு தூங்கும் போது தேவையில்லாத கனவுகள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், சில கனவுகள் காரண காரியத்தோடு தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் உங்களது குணாதிசயத்தையும், உங்களது வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை உணர்த்தக்கூடிய, குறிப்பிட்ட இந்த ஜீவராசிகள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

kulavi

சிவப்பு குளவியானது உங்கள் கனவில் வந்தால், ஏதோ ஒரு அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம். அந்த குளவி உங்கள் வீட்டில் கூடு கட்டுவது போல் கனவு கண்டால், உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரப்போகிறது என்பதை குறிக்கும். நீங்கள் நிலம் வாங்கி வைத்திருந்தால் வீடு கட்டுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீடுகட்ட நிலம் இல்லாதவர்கள், நிலம் வாங்குவதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடலாம். நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

உங்கள் கனவில் கருவண்டு வந்தால், அபசகுணத்தை குறிக்கும். சுபகாரியங்கள் தடைப்படும். சின்ன சின்ன பிரச்சனைகள் வீட்டில் வருவதற்கு வாய்ப்பு உண்டு. முடிந்தவரை உஷாராக இருப்பது நல்லது.

உங்களது கனவில் எறும்புகள் வரிசையாக செல்வது போல் வந்தால், சந்தேகமே வேண்டாம் நீங்கள் வியர்வை சிந்தி, இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் என்று தான் அர்த்தம். நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சியில் வெற்றி அடைய போகிறீர்கள் என்பது உறுதி. அந்த வெற்றியை நீங்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட மாட்டீர்கள். அந்த வெற்றிக்கு காரணமான மற்றவர்களையும் உங்களோடு கை கோர்த்து கொள்வீர்கள். அதாவது உங்களுக்கு கிடைத்த லாபத்தை, நீங்கள் மட்டுமே வைத்துக்கொள்ளாமல், உங்கள் உடன் இருப்பவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் குணாதிசயம் கொண்டவராக இருப்பீர்கள். ஆனால், அதுவே உங்கள் வீட்டிற்குள் எரும்பு வருவது போல் கனவு கண்டால், குடும்ப உறுப்பினர்களுடன் சின்ன சின்ன மனசஞ்சலம் ஏற்படப்போவது என்பது அர்த்தம்.

- Advertisement -

வௌவால் வந்து, உங்கள் தலையில் அடிப்பது போல கனவு கண்டால், உங்களுக்கு ஏதோ ஒரு மன பயம் ஏற்பட போகிறது என்பது அர்த்தம். அதாவது நீங்கள் பயப்பட கூடிய அளவிற்கு சம்பவம் நடக்கப் போகிறது என்பதை அறிவுறுத்துகிறது. வௌவால் குகைகளில் இருப்பது போல் கனவு வந்தால், உங்களது மன பயத்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்பது அர்த்தம்.

Bat

ஆண்களின் கனவில் காளை வந்தால், நீங்கள் பலமடங்கு பணக்காரராக போவது உறுதி என்பதை குறிக்கிறது. இதோடு மட்டுமல்லாமல், ஆண்களின் உடல் பலம் அதிகரிக்கும். அதுவே, பெண்களுக்கு கனவில் காளை வந்தால், அவர்களுக்கு எதிர்பாராத கஷ்டம் வரப்போகிறது அர்த்தம்.

உங்களது கனவில் முதலை வந்தால், யாரிடமோ தேவையில்லாமல் சண்டையில் போய் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்பது அர்த்தம். உஷாராக இருந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுவே, முதலை உங்களை கடிப்பது போல கனவு வந்தால், எதிர்பாராத பிரச்சனையில் சிக்கிக் கொள்ள போகிறீர்கள் என்பது அர்த்தம். முதலையிடம் சிக்கி, தப்பித்து விட்டதாக கனவு வந்தால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து நீங்கள் தப்பித்து விடுவீர்கள் என்பது அர்த்தம்.

crocodile

உங்களது கனவில் எட்டுக்கால் பூச்சியும், நெளிகின்ற புழுவும் வந்தால், நீங்கள் வாழ்க்கையில் எந்த திசையில் சென்றாலும் பிரச்சனையில் மாட்டிக் கொல்லப்போவதாக அர்த்தம். புழு, பூச்சிகள் கனவில்வந்தால் வாழ்க்கையை தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது.

இதையும் படிக்கலாமே
ஏப்ரலில் பிறந்தவர்கள் இப்படி பட்டவர்களா? இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ!!

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavu palan in Tamil. Kanavu palangal in Tamil. Kanavugalin palan. Kanavugal sollum palan.