இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இப்போதெல்லாம் சிறு வயது பிள்ளைகளுக்கு கூட இந்த இளநரையானது வந்து விடுகிறது. இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இந்த நரை முடி பிரச்சனை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நரைமுடியை சரி செய்யும் எண்ணெயை தயாரிக்கும் முறை:
இளநரையை மறைய செய்யும் இந்த எண்ணையை தயாரிக்க முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்து சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், அரை டேபிள் ஸ்பூன் மிளகு, இரண்டு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் மூன்றையும் லேசாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் பவுடராக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதே இரும்பு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை பொடி இரண்டையும் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் அடுப்பில் இரும்பு கடாய் வைத்த பிறகு 150 கிராம் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஏற்கனவே நாம் மிக்ஸியில் அரைத்து வைத்த வெந்தயம், மிளகு, கருஞ்சீரக பொடியை சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, கடைசியாக வறுத்து வைத்த நெல்லிக்காய், கறிவேப்பிலை பொடியும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது ஒரு இரவு முழுவதும் இரும்பு சட்டியில் அப்படியே இருக்கட்டும்.
மறுநாள் காலையில் இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து மசாஜ் செய்த பிறகு பத்து நிமிடம் கழித்து மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி விடுங்கள் போதும். இதை வாரம் இரண்டு முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் போதும். நரை முடி எல்லாம் மறைய தொடங்கி விடும். முடி உதிர்வு பிரச்சினையும் சுத்தமாக நின்று விடும் ஆச்சரியத்தை நீங்களே உணர ஆரம்பித்து விடுவீர்கள்.
இதில் சேர்த்திருக்கும் நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலை, கருஞ்சீரகம், வெந்தயம் இவை அனைத்துமே முடி வளர பெரிதும் உதவி செய்யும். இவை ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்வை தடுத்து புதிய முடிகளை வளர செய்பவை இத்துடன் நாம் மிளகு சேர்த்து இருப்பதால் அது தலையிலிருந்து பூச்சி வெட்டு கிருமிகள் போன்றவற்றை அழித்து அதுவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
இதையும் படிக்கலாமே: இந்த ஒரு சீயக்காய் தூள் அரைத்து வைத்துக் கொண்டால் போதும். தலை முடி அது பாட்டுக்கு காடு போல வளர்ந்து கொண்டே செல்லும். எவ்வளவு வயசானாலும் வழுக்கை வரவே வராது.
இந்த எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் இளநரை மறைய நீங்களும் இதை பயன்படுத்தி பலன் அடையுங்கள்.