இந்த ஒரு சீயக்காய் தூள் அரைத்து வைத்துக் கொண்டால் போதும். தலை முடி அது பாட்டுக்கு காடு போல வளர்ந்து கொண்டே செல்லும். எவ்வளவு வயசானாலும் வழுக்கை வரவே வராது.

hair10
- Advertisement -

அந்த காலத்தில் இருந்து தலைமுடிக்கு நாம் பயன்படுத்தி வரும் பொருள் இந்த சீயக்காய் தூள். ஆனால் சமீப காலமாக நிறைய பேர் இதை மறந்து விட்டோம். தலை முடிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒருமுறை மீண்டும் இந்த பழமைக்கு திரும்பி தான் பார்ப்போமே. வெறும் சீயக்காய் மட்டும் அல்லாமல் பாரம்பரிய முறையில், சீயக்காயோடு சேர்த்து ஒரு சில பொருட்களை அரைத்தால், சீயக்காய் நல்ல மணமோடு வாசனையாக இருக்கும். அதே சமயம் இந்த சீயக்காயை பயன்படுத்தினால் முடியில் இருக்க கூடிய அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். முடிக்கு தேவையான போஷாக்கும் கிடைக்கும். அழகான முடியை பெறுவதற்கு அழகான சீயக்காய் பொடி அரைப்பதற்கு அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

பாரம்பரிய முறையில் சீயக்காய் தூள் அரைக்க தேவையான பொருட்கள்:
சீயக்காய் – 1 கிலோ, வெந்தயம் – 200 கிராம், பச்சைபயறு – 200 கிராம், பூந்திக்கொட்டை – 200 கிராம், காய்ந்த நெல்லிக்காய் – 100 கிராம், காய்ந்த ஆவாரம் பூ – 50 கிராம், காய்ந்து செம்பருத்தி பூ – 50 கிராம், ரோஜா இதழ்கள் காய்ந்தது – 50 கிராம், வெட்டிவேர் – 50 கிராம், வெட்டிவேரை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மேலே சொன்ன பொருட்களில் எல்லாம் கொஞ்சம் கூட ஈரம் இருக்கக் கூடாது. வாங்கிய பொருட்களை ஒரு துணியில் கொட்டி பரப்பி வெயிலில் காய வைத்து விட்டு, அதன் பின்பு கடையில் கொடுத்து நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எல்லா பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. தேவையான அளவை கிராம் கணக்குகளில் கேட்டாலே கொடுத்து விடுவார்கள்.

அரைத்த சீயக்காய் தூளை அப்படியே வைத்து பயன்படுத்தக் கூடாது. ஒரு மாதத்திற்கு தேவையான அளவு பொடியை மட்டும் தனியாக ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து அதை தான் திறந்து திறந்து எடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த சீயக்காய் தூளின் வாசம் அவ்வளவு நறுமணத்தோடு இருக்கும். மீதம் இருக்கும் சீயக்காய் தூளை காற்று போகாமல் மூடி போட்டு பத்திரமாக எடுத்து வையுங்கள். ஆறு மாதத்திற்கு மேல் ஆனாலும் கெட்டுப் போகவே போகாது.

- Advertisement -

சரி இந்த சீயக்காய் தூளை எப்படி தலைக்கு பயன்படுத்துவது. தனியாக ஒரு கிண்ணத்தில், உங்கள் தலைக்கு தேவையான சீயக்காய் தூள் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூனோ அல்லது அதற்கு மேல் பட்டு தேவைப்பட்டாலும் அது உங்களுடைய சவுகரியம். இந்த சீயக்காய் தூளை, அரிசி வடித்த கஞ்சி ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து ஊற வைக்க வேண்டும். தலைக்கு குளிப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு ஊற வைத்தால் போதும். முந்தைய நாள் இரவே கஞ்சி தண்ணியை இப்படி சீயக்காய் தூளில் ஊற்றி கரைத்து வைத்து குளிக்கலாம். அது இன்னும் நல்லது.

இதையும் படிக்கலாமே: கொத்து கொத்தாக கொட்டிக் கொண்டே இருக்கும் முடியை கூட, 1 வாரத்தில் நிறுத்த இந்த 3 பொருட்கள் ஒன்று சேர்ந்தால் போதும். முடி உதிர்வுக்கு பவர்ஃபுல்வான, பெஸ்ட் ஹேர் ஃபால் ரெமிடி.

லேசான அந்த புளிப்பு தன்மை நம்முடைய முடி வளர்ச்சியை தூண்டும். அந்த நல்ல பாக்டீரியா முடிக்கு நல்லது தான். உங்கள் சௌகரியம் எப்படி வேண்டுமென்றாலும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனால் அரிசி வடித்த கஞ்சி தண்ணீரைக் கொண்டு இந்த சீயக்காய் தூளை கரைத்து அதை தலையில் தேய்த்து குளிக்கும் போது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். தலைக்கு குளிப்பதற்கு முன்பு தலையில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வைத்து ஜென்டில் ஆக மசாஜ் செய்வது ஒரு மணி நேரம் கழித்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அத்தனை நல்லது. மேல் சொன்ன அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -