நோ செலவு, இந்த 5 பொருளை பயன்படுத்தினால் பவுடர் கூட போட வேண்டாம் முகம் கண்ணாடி மாதிரி என்றென்றும் பளபளன்னு இருக்குமே!

- Advertisement -

நம்முடைய முகம் என்றென்றும் கண்ணாடி மாதிரியே பளபளன்னு மாசு, மரு இல்லாமல் இருக்க சாதாரணமாக எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த 5 பொருட்கள் போதும்! இதை தினமும் பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்! அதில் முக அழகை பேணிக் காப்பது எப்படி? பத்து பைசா செலவில்லாமல் இளமையாக இருப்பது எப்படி? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேன்:
தேனை விட சிறந்த மாய்ஸ்ரைசர் எதுவுமே இருக்க முடியாது. முகத்திற்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்க கூடிய பொருள் தேன்! இந்த தேனுடன் சிறிதளவு ஆரஞ்சு அல்லது எலுமிச்சையின் சாற்றை சேர்த்து முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள். அதிகம் தேவையில்லை ரெண்டு சொட்டுக்கள் விட்டால் போதும். மசாஜ் செய்து உலர விட்டு பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி பாருங்கள், முகம் பளிங்கு மாதிரி இருக்கும்.

- Advertisement -

தயிர்:
முதிர்ந்த தோற்றத்திலிருந்து இளமையான தோற்றத்தை கொடுக்கக்கூடிய தன்மை தயிருக்கு உண்டு. கெட்டியான தயிரை தினமும் நீங்கள் முகத்திற்கு பூசி உலர விட்டு கழுவினால், முகம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் ஒரே மாதிரியான நிறம் முகம் முழுவதும் இருக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய லாக்டிக் அமிலம் பிளீச்சிங்காக செயல்படும் என்பதால் முகம் பளிச்சுன்னு இருக்கும்.

பால்:
தினமும் பாலை பஞ்சால் தொட்டு முகத்தில் எல்லா இடங்களிலும் ஒற்றி எடுக்க வேண்டும். பிறகு நன்கு உலர விட்டு கழுவினால் முகத்தில் இருக்கக்கூடிய எல்லா விதமான அழுக்குகளும் நீங்கும். இயற்கையான முறையில் உங்களுடைய மேக்கப்பை கலைக்கவும், பாலை பஞ்சில் நனைத்து இப்படி பயன்படுத்தினால் நல்லது.

- Advertisement -

மஞ்சள்:
ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படக்கூடிய மஞ்சளில் அலர்ஜியை எதிர்த்து போராடக்கூடிய தன்மை உண்டு. எனவே இதனை தினமும் பூசி கொள்வதால் முகத்தில் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் தவறாமல் தினமும் மஞ்சளை பூசி பயன்படுத்தி கொண்டதுண்டு. அவர்களுக்கு அவ்வளவாக சரும பாதிப்புகள் வந்ததில்லை. மஞ்சளை அப்படியே பயன்படுத்த பிடிக்காதவர்கள் தயிருடன் கடலை மாவு சேர்த்து பேக் போட்டு பயன்படுத்துங்கள். எவ்வளவு வயதானாலும் என்றென்றும் இளமையான தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

கற்றாழை:
கற்றாழையில் இருக்கக்கூடிய மூலக்கூறுகள் சருமத்தை உள்ளிருந்தே பாதுகாக்க கூடிய அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளது. தினமும் கற்றாழை ஒன்றை மட்டுமே நீங்கள் பிரஷ்ஷாக பூசி பயன்படுத்தி வந்தால் முக சுருக்கங்கள் வரவே செய்யாது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், அழகு விஷயங்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

அடிக்கடி வெளியில் வெயிலில் அலைபவர்கள் இதனை தினமும் பயன்படுத்தி சிறந்த பலனை அடையலாம். முகத்தை எரிச்சல் ஊட்டக்கூடிய தன்மையில் இருந்து இது எளிதாக மீட்டெடுக்கிறது. இதனுடன் சிறிதளவு வேப்பிலை சாறை சேர்த்து முகத்தில் தடவி உலர விட்டு பின் கழுவி வந்தால் ரெண்டே மாதத்தில் முகத்தில் இருக்கக்கூடிய எல்லா சரும பிரச்சனைகளும் நீங்கி இளமையுடன் இருக்கும்.

- Advertisement -