வயசு ஏறிக் கொண்டே போனாலும் இளமையும், அழகும் அப்படியே இருக்க நீங்க என்ன செய்யனும் தெரியுமா? இது தெரிஞ்சிக்கோங்க இனி வயசு கூடுதுன்னு புலம்பவே வேண்டாம்!

face-ginger
- Advertisement -

வயதாக ஆக பலரும் தங்களுடைய இளமை பறிபோய் கொண்டு இருக்கிறது என்று வருத்தத்திற்கு ஆளாவார்கள். இளமையும், அழகும் எப்பொழுதும் நீடிப்பது கிடையாது ஆனால் ஆரோக்கியமான சருமமும், தேகமும் நம்மை இளமையாக தோற்றம் அளிக்க செய்யும். அப்படி இருக்க வயசு ஏறிக் கொண்டே செல்லும் பொழுது இந்த இளமையையும், அழகையும் தக்க வைக்க நாம என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முகத்தில் இருக்கக்கூடிய வயது முதிர்வை, முக சுருக்கத்தை நீக்கக் கூடிய தன்மை இஞ்சிக்கு உண்டு. இந்த இஞ்சியில் இருக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். இது மூலிகை மட்டும் அல்லாமல் டோனிங் செய்யக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. சிறந்த டோனராக செயல்படக்கூடிய இந்த இஞ்சியை தேங்காய் துருவுவது போல சிறிதளவு துருவி அதிலிருந்து கிடைக்கக்கூடிய துகள்களை முகத்தில் பூசி அப்படியே படுத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் இவற்றை சுத்தம் செய்து கழுவி விட வேண்டும். இதனால் முகம் மிருதுவாகும், கூடுதலாக ஜொலிக்கும்.

- Advertisement -

ஒரு டீஸ்பூன் மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பொடியை சேர்த்து இதனுடன் ரெண்டு டீஸ்பூன் தேன் கலந்து, கொஞ்சம் பன்னீரையும் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி நன்கு உலர விட்டுவிட வேண்டும். முகம் இருக ஆரம்பிக்கும் பொழுது முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ள வேண்டும். இது போல செய்யும் பொழுது முகத்தில் அருமையான மாற்றம் நிச்சயம் தெரியும். சுருக்கங்கள் அனைத்தும் இறுகி, நல்ல ஒரு இளமையை தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இளம் இஞ்சியை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றை முகப்பருக்கள் மீது தடவினால் முகப்பருக்கள் ரெண்டே நாளில் மறைந்து போவதை நீங்கள் காணலாம். அது மட்டும் அல்லாமல் பரு இருந்த வடு கூட தெரியாமல் சுத்தமாகிவிடும். அந்த அளவிற்கு இஞ்சியில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இஞ்சியில் சுமார் 40 ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இஞ்சி ரத்த ஓட்டத்தை தூண்டி, சருமத்திற்கு ஊட்டச்சத்து செல்வதற்கு துணை புரிகிறது. நீங்கள் எந்த ஒரு பேக் போடும் முன்பும் இஞ்சி சாறை தடவி உலர விட்டு போட்டால் நன்கு அப்சர்ப் செய்து கொள்ளும். இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை தூண்டி முகத்தை ஜொலிக்க செய்யக்கூடிய அற்புதமான ஆற்றல் இஞ்சி சாறுக்கு உண்டு.

சிலருக்கு முக துவாரங்கள் பெரிது பெரிதாக இருக்கும். நன்கு தெரியுமாறு இருக்கக்கூடிய இந்த முக துவாரங்களை கூட மெல்ல மெல்ல இருக செய்து உங்களுடைய இளமையை மீட்டு தரக்கூடிய அற்புதமான ஆற்றல் இஞ்சிக்கு உண்டு எனவே தினமும் இஞ்சியை உணவில் மட்டும் அல்லாமல் நம்முடைய சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தி வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். இஞ்சியுடன் தேன் சேர்த்து பேக்குகள் போடும் பொழுது இஞ்சியால் ஏற்படக்கூடிய எரிச்சலும் அடங்கும்.

- Advertisement -