ஆயுசுக்கும் இளமையாக இருக்க, சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதுமே! முகசுருக்கம் கண்ணுக்கு தெரியாமல் காணாமலேயே போய்விடும்.

இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது. இரண்டு குழந்தைகள் இருந்தாலும், பார்ப்பதற்கு அந்தக் குழந்தைகளின் சகோதரி போல் நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொன்னால், நிச்சயமாக பெண்களின் மனது பூரிப்பு அடையத்தான் செய்யும். உங்களை நீங்கள் இளமையான தோற்றத்தில் வைத்துக்கொள்ள, அதிகப்படியான காசு செலவு செய்யாமல் சுலபமான முறையில், உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே என்ன செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

star-anes

நம்ம எல்லார் வீட்டு சமையலறையிலும் இருக்கக்கூடிய ஒரு பொருள் அன்னாசிப்பூ. பிரியாணிக்கு பயன்படுத்தும் இந்த அன்னாசிப் பூவிற்கு வயது முதிர்ந்த தோற்றத்தை தள்ளிப் போகக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. முகச்சுருக்கத்தை விரைவில் நீக்கிவிடும். இந்த அன்னாசிப் பூவை நம்முடைய அழகை பாதுகாக்க எப்படி பயன்படுத்தலாம்.

முதலில் நான்கிலிருந்து ஐந்து அன்னாசி பூவை எடுத்து சிறிய உரலில் போட்டு நன்றாக நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால், மிக்சி ஜாரில் போட்டு 2 ஓட்டு ஓட்டினாலும் சரிதான். ஒரு சிறிய டம்ளர் அளவு தண்ணீரை எடுத்து, அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். அதில் இடித்த இந்த அன்னாசிப் பூவை சேர்த்து 5 லிருந்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.

இது நன்றாக ஆறியதும், வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் இரண்டு வாரங்கள் வரை கூட கெட்டுப்போகாது. ஒரு சிறிய பவுல் எடுத்துக்கோங்க. அதில் 1 ஸ்பூன் அளவு முல்தானி மெட்டியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அன்னாசிப்பூ தண்ணீரிலிருந்து தேவையான அளவு தண்ணீரை எடுத்து, முல்தானி மெட்டியோடு சேர்த்து பேஸ்ட் பதத்தில் தயார் செய்து, இறுதியாக 1 ஸ்பூன் அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து, இதை முகத்திலும் கழுத்து பகுதிகளும் நன்றாக அப்ளை செய்து, ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம்.

face7

அதன் பின்பாக நன்றாக குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு, உங்களுடைய வீட்டில் பாதாம் எண்ணெய் இருந்தால் ஒரு சொட்டை முகம் முழுவதும் தடவி விட்டு விடுங்கள். ஒரு நாள் விட்டு, ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்களுடைய முகம் எண்ணி பத்து நாட்களில் ஜொலிக்க தொடங்கி விடும் என்பதில் சந்தேகமே கிடையாது. சுருக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது, நீங்கள் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றம் தோடு பொலிவாக அழகாக இருப்பிங்க. ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
அட! இப்படி கூட தக்காளியை வைத்து, காரச் சட்னி அரைக்கலாமா? கொஞ்சம் வித்தியாசமாக ‘பச்சைமிளகாய் தக்காளி கார சட்னி’ ரெசிபி உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.