ஆயுசுக்கும் இளமை உங்களுடனே இருக்கும். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு 2 சொட்டு இதை உங்களுடைய முகத்தில் தடவிக் கொண்டால்!

face2
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ஆயுசுக்கும் இளமையான அழகான தோற்றத்துடன் இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். குறிப்பாக இளம் வயதில் நம்முடைய தோலில் சுருக்கம் விழுவது இளமைத் தோற்றத்தை குறைத்து காண்பிக்கும். இந்த சுருக்கம் விழுந்த, முதுமையான தோற்றத்தை யாருமே விரும்பமாட்டார்கள். தோல் சுருக்கம் விழாமல், ஆயுசுக்கும் நாம் இளமையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இதற்கான முதல் வழி நாம் எப்போதுமே சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். இது தவிர ஒரு சுலபமான அழகு குறிப்பு பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை செய்தால் உங்களுடைய தோலில் நிச்சயமாக சுருக்கம் விழாது.

flex-gel1

ஆளி விதைகள் என்று சொல்லப்படும் flex seeds ல் வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடக் கூடிய சத்துக்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது. இந்த ஆளி விதைகள் இப்போது கொஞ்சம் பெரிய அளவில் இருக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட்டில் சுலபமாக கிடைக்கின்றது. அதை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் 1 பெரிய டம்ளர் தண்ணீரை ஊற்றி, 1 டேபிள்ஸ்பூன் ஆளி விதைகளை போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டாலே போதும். அந்த தண்ணீர், கொஞ்சம் கொழகொழவென வந்திருக்கும். தண்ணீர் கொழகொழவென மாறியவுடன் உடனே அடுப்பை அணைத்துவிடுங்கள். ரொம்பவும் கொதிக்க விட்டால், இந்த ஜெல் ஆறிய பின்பு ரொம்பவும் கட்டியாக மாறிவிடும்.

aali-vithai

இப்போது இந்த ஜெல்லை அப்படியே ஆறவிடுங்கள். ஆறிய பின்பு ஆளி விதையில் சேர்ந்து இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும். ஒரு காட்டன் துணியில் ஆளி விதைகளை ஊற்றி, நன்றாக பிழிந்து எடுத்தீர்கள் என்றால், ஆளி விதை தனியாக, இந்த ஜெல் தனியாக கிடைத்துவிடும். இது பார்ப்பதற்கு அலோ வேரா ஜெல் போலவே இருக்கும். (ஒருவேளை இந்த ஆளி விதைகளை தண்ணீரில் நன்றாக, வெகு நேரம் கொதிக்க விட்டீர்கள் என்றால், ஜெல்லை மட்டும் உங்களால் தனியாக பிரித்து எடுக்க முடியாது. ரொம்பவும் கட்டியாக மாறிவிடும்.)

- Advertisement -

இந்த ஜெல்லை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமித்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். 3 மாதங்களுக்கு கெட்டுப்போகாது. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இதை ஸ்பூனில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஜெல்லை விரல்களால் தொட்டு, உங்களுடைய முகத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய புள்ளிகளாக வைத்து, அதை கண்ணுக்குத் தெரியாமல் அப்படியே மசாஜ் செய்து தடவி விட்டு விடுங்கள் போதும். (அதாவது முகத்திற்கு சீரம் பயன்படுத்துவோம் அல்லவா அதுபோல).

face5

இதை முகத்தில் போட்டு விட்டு கழுவ வேண்டாம். அப்படியே விட்டு விடலாம் இரவு முழுவதும். மறுநாள் காலை எப்போதும் போல உங்களுடைய முகத்தை கழுவி விடுங்கள். தினமும் இரவு இதை நீங்கள் செய்து வந்தால் உங்களுடைய முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்க தொடங்கும். வயதான தோற்றம் நிச்சயம் தள்ளிப்போகும். முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் படிப்படியாக தீர்வு கிடைக்கும்.

- Advertisement -