என்றென்றும் இளமையாக தெரிய உங்கள் முகம் பளபளக்க வீட்டிலேயே செய்து கொள்ளலாம் காபி ஃபேஷியல்

coffee
- Advertisement -

பெண்கள் ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். ஆனால் தங்களை பராமரித்துக் கொள்வதில் அவர்களுக்கு நேரம் மட்டும் கிடைப்பதில்லை. ஒரு பெண்ணை பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இப்படி அனைவரும் தங்களைப் பாராட்ட வேண்டும் என்பது தான் அனைத்து பெண்களின் விருப்பமாக இருக்கும். இவ்வாறு தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் பல தருணங்களில் முயற்ச்சி செய்ய நினைப்பார்கள். ஆனால் அதை சரியான நேரத்தில் அவர்களால் செய்ய முடிவதில்லை. ஆனால் மிகவும் எளிமையாகவும், குறைந்த நேரத்திலும் செய்யக்கூடிய இந்த காபி ஃபேசியலை சுலபமாக நினைத்த நொடியில் செய்ய முடியும். அதற்காக தேவைப்படும் பொருட்களும் மிகவும் எளிமையான பொருட்கள் தான். வாருங்கள் உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்ற காபி ஃபேசியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் முகத்தை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஃபேசியலுக்கு தேவையான இரண்டு வித காபி பவுடரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்று ஃபில்டர் காபி பவுடர், மற்றொன்று இன்ஸ்டன்ட் காபி பவுடர். முதலில் இரண்டு ஸ்பூன் காபி பவுடரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அதனுடன் 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஸ்பூன் பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் அதனை கிண்ணத்திற்கு மாற்றிக் கொண்டு, அதனுடன் 2 ஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து, கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் அப்ளை செய்து, 5 லிருந்து 10 நிமிடத்திற்கு லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு ஈரமான துணியை வைத்து முகத்தை நன்றாக துடைத்துவிட வேண்டும். அதன் பின்னர் ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் ஆலுவேரா ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த மசாஜ் க்ரீமை முகத்தில் தடவி 5 லிருந்து 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதனையும் ஈரத்துணி வைத்து நன்றாகத் துடைத்து எடுக்க வேண்டும். அதன்பின் மீண்டும் இரண்டு ஸ்பூன் ஃபில்டர் காபி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சேர்த்துக்கொள்ள சிறிதளவு காய்ச்சிய பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் இரண்டு ஸ்பூன் கோகோ பவுடரையும் சேர்த்து, இவை மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ் கிரீமை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும். பிறகு முகத்தை ஈரத் துணியை வைத்துத் துடைத்து கொள்ள வேண்டும். அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளலாம். அவ்வளவுதான் முகம் பளபளக்க வீட்டிலேயே சுலபமான காபி ஃபேஷியல் முடிந்துவிட்டது.

- Advertisement -