இழக்கக்கூடாததை இழந்து நிற்கதியாக நிற்கிறீர்களா? இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் ஏற்றி பாருங்கள். இழந்ததை விட பல மடங்கு திரும்ப பெறுவீர்கள்.

nellikai
- Advertisement -

மனிதன் தன் வாழ்க்கையில் பெறுவதற்கும், இழப்பதற்கும் நிறைய இருக்கின்றன. பல இழப்புகள் நம்மை பாதிக்காது. ஆனால் சில இழப்புகள் நம் வாழ்க்கையை நிர்மூலமாக்கி விடும். அதிலும் மிகவும் குறிப்பிடத்தக்கது செல்வமும், உறவும். இவற்றில் ஏதாவது ஒன்றை இழந்து விட்டால் நம் வாழ்க்கை அர்த்தமற்றதாக நமக்கே தெரியும். அப்படி நாம் இழந்ததை திரும்பப் பெறுவதற்கு எந்த தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களைத் பெற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஆசீர்வாதம் செய்தனர். அந்த பதினாறு வகையான செல்வங்களையும் நாம் பெறுவதற்கு நமக்கு அஷ்டலட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். இந்த 16 செல்வங்களில் ஏதாவது ஒன்றை நாம் இழக்கிறோம் என்றால் படிப்படியாக அனைத்து செல்வங்களையும் இழக்க கூடிய நிலைமை ஏற்படும். காரணம் ஒரு செல்வத்தை இழந்தால் கூட அஷ்டலட்சுமியின் அருள் நமக்கு இல்லை என்று பொருள்படும். இந்த நிலையில் இருந்து நாம் வெளியே வருவதற்கு செய்ய வேண்டிய அற்புதமான எளிய பரிகார முறையை பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

மகாலட்சுமியின் பரிபூரணமான அருளைப் பெற்ற பொருட்கள் என்று நாம் பல பொருட்களை பார்த்திருக்கிறோம். அவற்றை நம் வீட்டில் வைப்பதன் மூலம் மகாலட்சுமியை நம் வீட்டிற்கு வரவழைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அவற்றுள் மிகவும் முக்கியமாக கருதப்படுவது தான் நெல்லிக்காய். நெல்லிக்காய் மரம் யார் வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நெல்லிக்காய் மரம் வைக்க இயலாதவர்கள் வீட்டில் நெல்லிக்காய் எப்பொழுதும் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அந்த நெல்லிக்காயை வைத்து தீபம் ஏற்றும் முறையை பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை அன்று கண்டிப்பான முறையில் வீட்டில் விளக்கேற்றி தெய்வ வழிபாட்டை மேற்கொள்வோம். அவ்வாறு வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நெல்லிக்காயை பயன்படுத்தி விளக்கேற்றினால் அஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டில் வாசம் புரிவார்கள் என்பது உறுதி. இதற்கு இரண்டு நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயில் எந்தவித புள்ளிகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த நெல்லிக்காய்களை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு அதன் மேல் பாகத்தை கத்தியின் உதவியுடன் திரி வைப்பதற்கு ஏதுவாக பள்ளம் தோண்ட வேண்டும். பிறகு அந்த நெல்லிக்காய்களுக்கு சந்தனம் பொட்டு வைக்க வேண்டும். மகாலட்சுமி புகைப்படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்து அதில் பச்சரிசியை போட்டு நெல்லிக்காய் ஆடாத வண்ணம் அதில் வைக்க வேண்டும். நெல்லிக்காயில் நாம் நெய் ஊற்றி திரி போட்டு ஏற்ற முடியாது என்பதால் முந்தைய நாள் இரவே திரியை நெய்யில் போட்டு ஊற வைத்திருக்க வேண்டும். நெயில் ஊறிய திரியை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்ற வேண்டும்.

இந்த தீபத்தை காலை பிரம்ம முகூர்த்த வேலையில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரையில் ஏற்ற வேண்டும். ஏற்றிய பிறகு உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு மகாலட்சுமி தாயாரின் பாடலை பாடலாம். அதைவிட மிகவும் சிறந்ததாக கருதப்படுவது கனகதாரா ஸ்தோத்திரம். யார் வீட்டில் நெல்லிக்காய் தீபம் ஏற்றி கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கிறார்களோ அவர்கள் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்கும் என்பது ஆதிசங்கரர் கூறியது.

- Advertisement -

தீபம் எரிந்து முடிந்த பிறகு மறுநாள் அந்த நெல்லிக்கனிகளை எடுத்து நாம் பிரசாதமாக உண்ணலாம். அப்படி உண்ண பிடிக்கவில்லை என்றால் ஒரு சிறிய அளவாவது வாயில் போட்டுவிட்டு மீதம் இருக்கும் நெல்லிக்காய்களை காய வைத்து நெல்லிக்காய் பொடி தயாரித்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பச்சரிசியை பறவைகளுக்கு சாப்பிட போட்டு விடலாம். நெல்லிக்காயை வீணாக்க கூடாது. அப்படி செய்தால் நாம் செய்த இந்த வழிபாட்டிற்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விடும். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் காலையில் நெல்லிக்கனி தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நிலை வாசலுக்கு வெளியே நின்று கொண்டு சுக்கிரனை நினைத்து இதை மட்டும் தூவினால் வீட்டிற்குள் நீங்கள் வருவதற்கு முன்பே பணம் வீட்டுக்குள் வந்து குவிய தொடங்கி விடும்.

மிகவும் எளிமையான அற்புதமான இந்த தீபத்தை நம்பிக்கையுடன் நாமும் நம் வீட்டில் ஏற்றி அஷ்ட லட்சுமிகளின் அருளை பெற்று இழந்த அனைத்து செல்வங்களையும் மீட்டெடுப்போம்.

- Advertisement -