இழந்த சொத்துக்கள் அனைத்தும் திரும்ப பெறவும், கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாவும், இந்த திதியை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். வரவே வராது என்று நினைத்த சொத்து கூட உங்களை தேடி வரும்.

- Advertisement -

இன்றைய கால சூழலில் பிறரின் பொருளுக்காக ஆசைப்பட்டு கெட்டதை செய்யும் மனிதர்கள் பெருகி விட்டார்கள். இந்த நிலையில் நியாயமான முறையில் போராடுபவர்கள் நிலைமை எப்பொழுதுமே கவலைக்கிடம் தான். அவர்களைப் போல நம்மால் குறுக்கு வழியில் சென்று எதையும் சாதித்துக் கொள்ள முடியாது. அதற்கு மனசாட்சியும் ஒத்துக் கொள்ளாது. இப்படி நமக்கு வர வேண்டியவற்றை நம்மை ஏமாற்றி நம் பொருட்கள் அபகரித்தவர்களிடமிருந்து நமக்கானவைகளை திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், அதற்கான பல நிச்சயம் உண்டு என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை செய்யும் முன்பு ஒன்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இதின் மூலம் உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவற்றை மட்டும் தான் பெற முடியும். அது மட்டு மின்றி சில இடங்களில் உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள் இவர்களுக்கிடையே சின்ன சின்ன சொத்து தகராறு இருக்கும் அது பெரிய அளவிலான சொத்தாக கூட இருக்காது. வீண் கௌரவத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருப்போம். இது போன்ற சூழ்நிலையில் இந்த பரிகாரத்தை செய்வதை விட,  நாம் சம்பந்தப்பட்டவருடன் அமர்ந்து பேசி சுமுகமாக முடிக்கலாம் அல்லது நீங்கள் விட்டுக் கொடுக்கும் நிலையிலிருந்தால் தாராளமாக விட்டுக் கொடுக்கலாம். இது உங்களுக்கு கோடி புண்ணியத்தை சேர்த்துக் கொடுக்கும் இந்த தகவலுடன் நாம் இந்த பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இழந்த சொத்தை திரும்ப பெற பரிகாரம்
இந்த பரிகாரத்தை நிச்சயமாக சிவாலயத்தில் தான் செய்ய வேண்டும். அதுவும் பஞ்சமி திதியில் தான் செய்ய வேண்டும். ஒரு பஞ்சமி திதி நாளில் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று 9 அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பஞ்சுத் திரி போட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய உடன் ஆலயத்தில் உள்ள நடராஜ பெருமாள் முன் நின்று உங்களின் நியாமான கோரிக்கையை, குறைகளை மனதார அவரிடம் ஒப்படைத்து, இவைகளை எனக்கு நிவர்த்தி செய்து தாருங்கள் என்று உருகி வேண்டிக் கொண்டு வந்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 27 பஞ்சமி திதிகள் செய்ய வேண்டும். 27 திதிகளா என்று மலைக்க வேண்டாம். ஏனென்றால் அதற்குள்ளாகவே உங்களின் வேண்டுதல் பலித்து விடும் வாய்ப்புகளும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் வைத்த வேண்டுதல் பலித்து விட்டால் கூட, விடாமல் இந்த 27 பஞ்சமி திதியில் தீபம் ஏற்றி நடராஜப் பெருமானை வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

நீங்கள் இழந்தவை எல்லாம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவதோடு, இனி இது போன்ற துன்பங்கள் உங்களுக்கு நேராது.

இதையும் படிக்கலாமே: சொந்த தொழிலில் போட்டியா? உங்களுக்கு வரும் வருமானம் அடுத்தவர்களுக்கு செல்கிறதா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இவர் தான்! இவரை எப்படி வணங்கினால் தொழில் சிறக்கும் தெரியுமா?

இந்த பஞ்சமி திதி தீபத்தை ஏற்றி உங்கள் வாழ்க்கையில் தீராத இந்த துயரத்தை போக்கி நியாயமான முறையில் இழந்த உங்களின் சொத்துக்களையும், உடைமைகளையும், வழக்குகளையும் வெற்றி பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -