சொந்த தொழிலில் போட்டியா? உங்களுக்கு வரும் வருமானம் அடுத்தவர்களுக்கு செல்கிறதா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இவர் தான்! இவரை எப்படி வணங்கினால் தொழில் சிறக்கும் தெரியுமா?

budhan-bagawan
- Advertisement -

சொந்த தொழில் அமைவது என்பதும் ஒரு கொடுப்பினை தான். மாதா மாதம் வருமானத்தை மற்றவரிடம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை மாறி, நாம் மற்றவர்களுக்கு சம்பள பணத்தை கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்பது தான் எல்லோருடைய கனவாக இருக்கிறது. அப்படி அமைந்த சொந்த தொழிலில் போட்டிகள் அதிகம் இருக்கும். அதை எப்படி எதிர்கொள்வது? எந்த தெய்வத்தை வணங்குவது? என்பதை தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்.

தொழில்முறை போட்டிகள் இன்று எல்லா தொழிலிலும் நடைபெற்று வருகிறது. சிறு தள்ளுவண்டி கடை முதல் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கும் போட்டிகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு தெருவில் கடை ஆரம்பித்தால் அதே தெருவில் அதே மாதிரியான கடை ரெண்டு மூன்று என்று இருந்தால் வியாபாரம் எப்படி ஆகும்? மக்கள் யாரிடம் பொருட்களை வாங்குவார்கள்? இதனால் ஒருவருக்கு செல்லக்கூடிய வருமானம், இன்னொருவருக்கு தடைப்பட்டு விடுகிறது. இப்படி நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்குரிய பலனை மற்றவர்கள் அனுபவிக்கும் நிலை வருகிறது என்றால், நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் புத பகவான் ஆவார்.

- Advertisement -

புதன் வர்த்தகம், வணிகம், வியாபாரம், தொழில், கடை, பல தரப்பட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு காரகத்துவம் பெற்றவராக இருக்கிறார். ஒருவர் வணிகத்தில் சிறந்தவராக வர வேண்டும் என்றாலும், அவர்களுடைய துறையில் வல்லுனராக திகழ வேண்டும் என்றாலும் புத பகவானுடைய அருள் பரிபூரணமாக தேவை. புதபகவான் அருள் பெற்றவர்கள் திறமை இருந்தால் சிரமப்படாமல் ஓஹோ என்று வந்து விடுவார்கள். ஆனால் புதபகவானுடைய அருள் குறைந்தால் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற முடியாமல் அதே நிலையில் வாடிக் கொண்டிருப்பார்கள்.

புதன் புத்தி காரகனாக விளங்குகிறார். அறிவாற்றலுடன் செயல்பட வைக்கிறார், நம்முடைய திறமைகளை மேலும் மேலும் மெருகேற்றி, நம்மை நாமே உயர்த்திக் கொள்ளக்கூடிய ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறார். நம்மை மட்டும் அல்லாமல் நம்மால் பலரும் வாழும் படியாக நம்மை உயர் நிலையில் வைக்கிறார். இவரை தவறாமல் புதன்கிழமை தோறும் வழிபட்டு வர வேண்டும்.

- Advertisement -

புதன்கிழமை தோறும் புதன் பகவானை நினைத்து வீட்டில் ஐந்து வெற்றிலை, இரண்டு கொட்டை பாக்கு வைத்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுங்கள். புதன் கிழமைகளில் பச்சை நிற உடைகளை உடுத்த பாருங்கள். பச்சை நிறம் என்றால் புதன் பகவானுக்கு ரொம்பவும் இஷ்டமான ஒரு நிறம் எனவே உடனே வந்து உங்களை பற்றிக் கொள்வார்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் கையில் இந்த 1 பொருளை வைத்துக் கொண்டு குபேரர் பெயரை சொல்லிவிட்டால், குபேரர் உங்களுக்கு வசியமாகிவிடுவார். பிறகு கோடி கோடியாக செல்வ வளத்தை கொட்டிக் கொடுக்க தொடங்கி விடுவார்.

அதுபோல புதன் கிழமைகளில் முடிந்தால் அருகில் இருக்கும் நவகிரக சந்நிதிக்கு சென்று புது பகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சாற்றி இரண்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள். பச்சை பயறை தானம் செய்ய வேண்டும் அல்லது பச்சை பயறை கொண்டு ஏதாவது நைவேத்தியம் செய்து அதையும் நீங்கள் படைத்து வழிபட்டு தானம் செய்யலாம். மேலும் புத பகவானுக்கு வெண்காந்தள் மலர் என்றால் ரொம்பவும் இஷ்டமானது. வெண்காந்தள் மலர் கிடைத்தால் வாங்கி அர்ச்சனை செய்யுங்கள். பச்சை நிற பேனாவை பயன்படுத்தி கணக்கு வழக்குகளை எழுதுங்கள். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமை தோறும் செய்து வர தொழில் போட்டிகள் அனைத்தும் தடைபடும். உங்களை எதிர்க்க யாராலும் முடியாது, உங்களை மென்மேலும் உயர்த்தி தொழில் வளம் சிறக்க செய்வார்.

- Advertisement -