- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுழந்தை பாக்கியம் பரிகாரம்

குழந்தை பாக்கியம் பரிகாரம்

- Advertisement -

கருப்பை சார்ந்த பிரச்சினைகளை நீக்கக் கூடியதில் பங்கு வகிக்கிறது இந்த இலந்தை இலை. அறிவியல் ரீதியாகவும் இலந்தை கொழுந்து இலையை முறைப்படி சாப்பிட்டு வருபவர்களுக்கு, கருப்பை சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த இலந்தை இலையை வைத்து செய்ய வேண்டிய அற்புத பரிகாரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து காண இருக்கிறோம்.

இலந்தை பொதுவாக இரண்டு விதங்களில் நமக்கு தெரியும். ஒன்று சிறிய அளவில் உருண்டையாக நன்கு புளிப்பாக இருக்கக் கூடியது. இதில் உப்பு, மிளகாய் போட்டு சிறுவயதில் வாங்கி சாப்பிட்ட அனுபவம் இருக்கும். இன்னொன்று இனிப்பாக பெரிய அளவில் நீள் வட்ட வடிவில் இருப்பது ஆகும். வலைகளில் போட்டு விற்பனை செய்வதை வாங்கி சாப்பிட்டு இருப்போம். இதில் இனிப்பாக இருக்கக்கூடிய இலந்தை மரத்தின் இலைகளை கொழுந்தாக பார்த்து பறித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கொழுந்து இலந்தை இலைகளை பறித்து வந்து கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதை பயன்படுத்த வேண்டும். இலந்தை இலைகளை இஷ்ட தெய்வத்தின் முன்பு ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதனுள் போட்டு வைத்து வெள்ளிக்கிழமையில் மனதார குழந்தை வரம் வேண்டி பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். பின்பு மாதவிடாய் நாட்களில் முதல் இரண்டு நாட்கள் இந்த இலைகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் எளிதாக பறித்துக் கொள்ளும்படியாக உங்கள் வீட்டு அருகாமையில் இந்த மரம் இருந்தால், பிரஷ் ஆக பறித்துக் கொள்ளலாம். பூஜையில் வைத்து பிரார்த்தித்து பின்பு அந்த இலைகளை நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு மிக்சர் ஜாரில் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆறு மிளகு, நான்கு பல் பூண்டு தோல் உரித்து சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. அரைத்த விழுதை உருண்டை போல பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு சாதத்தில் ஊற வைத்த தண்ணீரை நன்கு சாதத்துடன் சேர்த்து காலையில் கரைத்து நீரை மட்டும் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கஞ்சி தண்ணீருடன் அரைத்து வைத்த உருண்டையையும் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை அப்படியே குடித்து விடுங்கள். காலையில் வெறும் வயிற்றில் குடித்துவிட்டு பிறகு ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் சாதாரண உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது போல மாதவிடாயின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் செய்யுங்கள். மற்ற நாட்களில் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இதையும் படிக்கலாமே:
தை மாத தேய்பிறை பிரதோஷ பாடல்

இப்படி தொடர்ந்து ஐந்து மாதம் செய்து வந்தால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இலந்தை இலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இலை மட்டும் அல்லாமல், இதன் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. அடிக்கடி இலந்தை பழங்கள் சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சி அடையும். தெய்வத்தின் அருளோடு இதை பின்பற்றும் பொழுது நிச்சயம் கர்ப்பம் தரிக்கும்.

சற்று முன்