இப்படி மட்டும் சாம்பார் செஞ்சி பாருங்க. தட்டு நிறைய இட்லி, தோசை எது போட்டாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

sambar seivadhu epapdi
- Advertisement -

பருப்பு சாம்பார் என்பது இட்லி தோசைக்கும் சாதத்திற்கும் அதிகமாக வீட்டில் செய்யும் ஒரு குழம்பு. நாம் எப்போதும் ஒரே மாதிரியாக தான் சாம்பார் செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் சுவையில் சிறிதளவு மாற்றம் செய்து சமைத்து பாருங்கள். சாப்பிடுபவர்கள் அளவில் அதிகமாக உண்பார்கள். சுவையை அதிகரிக்க நாம் கையாள வேண்டிய ரகசிய குறிப்பு உள்ளது. அதனை தெரிந்து கொள்ள மேலும் தொடருங்கள்.

sambar3

சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 200 கிராம், வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 100 கிராம், புளி ஒரு நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி அல்லது மிளகாய் தூள் – 2 ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், பூண்டு – 10 பல், உப்பு தேவையான அளவு.

- Advertisement -

சாம்பார் செய்முறை:
முதலில் 200 கிராம் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி குக்கரில் போட்டு அதனுடன் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் நான்கு துண்டுகளாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும். குக்கரில் 4 விசில் வரும் வரை பருப்பை வேக விடவேண்டும். விசில் வந்ததும் பிரஷர் குறையும் வரை அதனை அப்படியே வைக்கவேண்டும்.

cooker2

அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதில் சாம்பார் தாளிக்க தேவையான எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு போட வேண்டும். அவை பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்னர் புளியை கரைத்து அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். குக்கரை திறந்து பருப்பு கடையும் மத்து வைத்து பருப்பை கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடைந்து எடுத்த பருப்பை கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் சேர்க்க வேண்டும். இந்தக் கலவைகள் இரண்டும் சேர்ந்து நன்கு கொதிக்க வேண்டும்.

Aravai sambar

இப்போது முக்கியமான தருணம். இந்த சாம்பாரின் சுவையை இன்னும் அதிகமாக்க ஒரு சிறிய மசாலாவை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய பழுத்த தக்காளி அதனை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு அதனுடன் 4 அல்லது 5 பல் தேங்காய் இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை அந்த சாம்பாரில் சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியாக மேலே ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் மூடி வைத்து பின்னர் உணவுடன் சாம்பார் சேர்த்து பரிமாறவும். நிச்சயமாக எப்போதும் இருக்கும் சுவையை விட வேறுபட்ட சுவையுடன் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடத் தோன்றும். மிஸ் பண்ணாம இந்த ரகசிய குறிப்பை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து தான் பாருங்களேன்.

- Advertisement -