பெண்கள் செய்யக்கூடாத சில முக்கியமான செயல்கள்

woman-with-gold

நம் வீட்டில் பெண்கள் சில செயல்களை மறந்தும் செய்யக்கூடாது. ஆண்களும் சில செயல்களை கட்டாயம் செய்யக்கூடாது. அதில் பெண்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண் அந்த வீட்டில் என்ன பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றாளோ அவளது குடும்பமும் அதை தான் கடைப்பிடிக்கும். ஒரு குடும்பத்தை நல்ல வழியில் நடத்துவது அந்த வீட்டின் பெண்ணின் கையில் தான் உள்ளது. அந்தப் பெண் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போமா?

home

பெண்கள் வீட்டில் சத்தம் போட்டு பேசக்கூடாது. அதனால் எந்த பயனும் இல்லை. எந்த ஒரு விஷயத்தை மற்றவர்களிடத்தில் கூற வேண்டும் என்றாலும் அமைதியாகத் தான் கூற வேண்டும். சத்தம்போட்டு பேசும்போது நாம் என்ன கூற வருகிறோமோ அது மற்றவர்களின் காதில் விழாது. அந்தக் கூச்சல் மட்டும் தான் மற்றவர்களுக்கு கேட்கும். ஆகையால் அமைதியான முறையில் பேச வேண்டும். ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். ஏற்றுக்கொள்ளாதவர்களிடத்தில் சத்தம் போடுவதால் எந்த பயனும் இல்லை.

பெண்கள் தலை சீவிவிட்டு சீப்பில் உள்ள முடியை தரையில் போடக்கூடாது. அந்த முடியானது தரையில் போடும் போது காற்றில் நம் வீட்டில் அங்குமிங்குமாக அலைவது நம் வீட்டிற்கு நல்லது அல்ல. நம் வீட்டிற்கு அது தரித்திரத்தை உண்டாக்கும். நகங்களை வெட்டி வீட்டின் உள்ளே போடக்கூடாது. நகம், முடி இவை இரண்டையும் குப்பைக் கூடையில் போடுவது நல்லது.

Hair

குழப்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு, இரண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு பிய்த்து கொள்ளும் பழக்கம் இருப்பவர்களாக இருந்தால் அதை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள். குழப்பம் அல்லாமல் பேன் அரிப்பாக இருந்தாலும் அப்படி தலையை சொரிந்து கொள்ளக்கூடாது. அது நம் வீட்டிற்கு நல்லது அல்ல.

- Advertisement -

பெண்கள் மன அமைதிக்காகத் தான் கோவிலுக்கு செல்கின்றோம். கோவிலுக்குச் சென்று மற்ற பெண்களிடம், வேண்டாத விஷயங்களை பற்றி பேசுவது, ஒருவரை பற்றி மற்றவர்கள் குறை கூறுவது, இப்படிப்பட்ட அநாவசிய பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். அவரவர் வேண்டுதல்களை மட்டும் கோவிலில் மனதார நினைத்தால் போதும்.

ancient women

பெண்கள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்களிடமும் கொடுக்கக்கூடாது. அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைப்பது நல்லது. இது நம் வீட்டிற்கு நன்மை தரும். பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது அர்ச்சகர் கையில் இருந்து தான் விபூதி குங்குமத்தை பெறவேண்டும். மற்றவர்கள் கையிலிருந்து வாங்கக்கூடாது.

விஷ்ணு கோவிலுக்கு சென்றால் தீர்த்தம் தருவார்கள். அதை நாம் குடித்து விடவேண்டும். அல்லது தலையில் தீர்த்தமாக தெளித்துக் கொள்ள வேண்டும். பாதி தீர்த்தத்தை குடித்து விட்டு பாதியை தலையில் தீர்த்தமாக விடுவது தவறு.

sankarankovil

கோவிலில் இறைவனை வழிபடும் போது ஈரத்துணியோடு செல்லக்கூடாது. ஈரத்துணியை நம் கையில் கூட வைத்திருக்கக்கூடாது. வீதியில் சுவாமி ஊர்வலம் வரும்போது இறைவனை பிரதக்ஷ்ணம் செய்யக்கூடாது. நமஸ்காரம் செய்து வழிபடலாம்.

நம் வீட்டு கதவுகளில் துணி போடும் பழக்கத்தை நாம் பின்பற்றக்கூடாது. சிலபேர் குளியலறை கதவின் மேல் துணியை போட்டு குளிக்கும் பழக்கம் இருந்தால் அதை இன்றோடு விட்டு விடுங்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இரண்டு கைகளையும் கன்னங்களில் வைத்து உட்காரக்கூடாது.

ennai-kuliyal

இவை அனைத்தையும் அவரவர் வீட்டில் பெண்கள் பின்பற்ற வேண்டும். பெண்கள் தெரிந்து கொண்டால் தான் நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்ல முடியும். நம் முன்னோர்கள் நமக்காக கூறியிருக்கும் எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களும், நல்ல பழக்க வழக்கங்களும், நிச்சயமாக அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், காரணங்களை வைத்துத்தான் கூறியிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும், நல்லது எதுவாயினும் அதை கடைபிடிப்பதில் கஷ்டப்படக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
குபேர விளக்கை எப்படி ஏற்றினால் அதிஷ்டம் பெருகும்?

English Overview:

Here we have Pengal seiya kudathavai. Pengal seiya vendiyavai. Pengal veetil eppadi irukka vendum.