கண்ணாடி முகம் பார்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைத்தோம்! ஆனால் இப்படியும் சில ரகசியங்கள் இருக்கிறதா?

mirror-poojai

முகம் பார்க்கும் கண்ணாடி முகம் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. வீட்டில் முகம் பார்ப்பதற்கு மட்டும் தான் நீங்கள் கண்ணாடி வைத்து இருக்கிறீர்கள் என்றால் சாஸ்திர உண்மை படி நீங்கள் இன்னமும் கஷ்டப்பட்டு தான் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பூஜைகளின் போது முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? உண்மையில் முகம் பார்க்கும் கண்ணாடி, வேறெந்த விஷயங்களுக்கும் பயன்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mirror kannaadi

அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டால் இருக்கின்ற அழகும் போய்விடும் என்று பேச்சு வழக்காக கூறுவது உண்டு. அடிக்கடி நம்முடைய முகத்தை கண்ணாடியில் பார்ப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. கண்ணாடியை அதிகம் பார்க்காதவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் தெரியுமா? கண்ணாடியை அடிக்கடி பார்த்தால் நம்முடைய கைகள் முகத்திற்கு அடிக்கடி செல்லும். இதன் மூலம் கைகளில் இருக்கும் கிருமிகள் முகத்திற்கு பரவும் என்பதால் முக அழகு கெடும். இதன் காரணமாகத் தான் அடிக்கடி கண்ணாடி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

நோன்பு, அமாவாசை, தீபாவளி போன்ற சமயத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை தெய்வமாக நினைத்து வழிபாடுகள் செய்வது தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதன் ஆன்மீக ரீதியான காரணம் என்ன தெரியுமா? விரத தினங்களில் நம்முடைய நலம் விரும்பிகளாக இருக்கும் நம்முடைய வீட்டு குலதெய்வமும், பித்ருக்களும் அதாவது முன்னோர்களும் நம் வீட்டிற்கு வருகை புரிவதாக சாஸ்திரம் கூறுகிறது.

mirror

அந்தக் காலத்திலெல்லாம் புகைப்படங்கள் இல்லாததால் கண்ணாடியை புகைப்படமாக நினைத்து வழிபாடுகளின் பொழுது வைப்பது வழக்கம். அந்த கண்ணாடியில் குலதெய்வமும், நம்முடைய முன்னோர்களும் மறைமுகமாக தோன்றி மறைவதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளும் பொழுது ஒரு கண்ணாடியை வைத்து அதற்கும் மஞ்சள் குங்குமம் இட்டு பூச்சூடி வழிபாடுகள் செய்தால் அதில் முன்னோர்கள் மற்றும் குலதெய்வம் தோன்றும் பொழுது நம்மையும் சேர்த்து வழிபடுகிறார்கள் என்கிற ஆனந்தத்துடன் செல்வார்களாம். உண்மையில் கண்ணாடி இல்லாமல் நீங்கள் செய்யும் வழிபாடுகள் அவர்களை மகிழ்விக்காது என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

அது போல் நம் வீட்டிற்கு ஒரு சிலர் பொறாமை கண்களுடன் வெறித்துப் பார்க்கும் பொழுது திருஷ்டி தோஷம் ஏற்படுகிறது. நாம் உணவருந்தும் பொழுது யாரோ நம்மை நினைத்தால் கூட நமக்கு புரை ஏறும் என்பது போல, யாராவது நம்மை திட்டினால் உடனே நாக்கை கடித்து கொள்வது போல, நமக்கே தெரியாமல் நம் மேல் விழும் பொறாமை கண்களை திசை திருப்ப நம் வாசலுக்கு நேர் எதிரே முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும்.

mirro

வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் பொழுது அவர்களுடைய பிம்பம் எப்படியும் அந்த கண்ணாடியில் பட்டு விட்டு தான் வீட்டிற்குள் நுழைவது போல் இருக்க வேண்டும். முகம் பார்க்கும் கண்ணாடி ஆனது திருஷ்டிகளை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. பெரிய பெரிய வீடுகள் புதிதாக கட்டும் பொழுது இது போல் செய்து வைத்தால் அந்த வீட்டின் மேல் அவர்களுக்கு போகும் பார்வை முதலில் கண்ணாடி ஈர்த்துக் கொள்ளும். இதனால் அந்த வீட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் நீங்கி விடும்.

wall mirror

அது போல் படுக்கையறையில் அமைத்திருக்கும் கண்ணாடிகள் திறந்தவாறு இருக்கக் கூடாது. திரை போட்டு மூடி வைத்து இருப்பது தான் மிகவும் நல்லது. இப்படியாக முகம் பார்க்கும் கண்ணாடியை முகம் பார்க்க மட்டும் பயன்படுத்தாமல், இந்த விதங்களிலும் நீங்கள் பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை கூறி பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
தலைவாரும் போது உதிரும் முடியை பறக்க விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.